ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க நிரந்தரத் தடை: வரவேற்கத்தக்க உயர்நீதிமன்றத் தீர்ப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 18, 2020

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க நிரந்தரத் தடை: வரவேற்கத்தக்க உயர்நீதிமன்றத் தீர்ப்பு!

தமிழர் தலைவர்  கருத்து


தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர் லைட் தாமிர ஆலையைத் திறக்க விதிக்கப் பட்டுள்ள தடை தொடரும் - அது நிரந்தரமாக மூடப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு  வரவேற்கத்தக்கது - மகிழ்ச்சியளிக்கிறது.


பெரும் சுற்றுச் சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தி, தூத்துக்குடி மக்களின் வாழ்க்கைக்குச் சவாலாக இருந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வந்த தூத்துக்குடி மக் களுக்கும், இயக்கங்களுக்கும் கிடைத்த வெற்றி இது! அனைவருக்கும் நம் பாராட்டுகள், வாழ்த்துகள்!


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு, துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 13 போராளிகளுக்கும் இந் நேரத்தில் மீண்டும் நம் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


 


கி.வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


18.8.2020


 


No comments:

Post a Comment