முதியோருக்குச் சரியான நேரத்தில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 5, 2020

முதியோருக்குச் சரியான நேரத்தில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஆக.5 தகுதி வாய்ந்த முதியவர்களுக்குச் சரியான நேரத்தில் ஓய்வூதியம் கிடைப்பதற்கு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞர் அஸ்வனி குமார் தாக்கல் செய்த மனுவில், தகுதி வாய்ந்த முதியவர்களுக்குச் சரியான நேரத்தில் ஓய்வூதியம் கிடைப்பதற்கு தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். முதியோர் இல்லங்களில் உள்ள முதியவர்களை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கத் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன் றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுடன் முதியோருக்குப் பாகுபாடின்றி சிகிச்சைகள் அளிக்க வழிவகை கோரும் மற்றொரு மனுவும் நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான காணொலி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.


அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வி.மோகனா இடைமறித்து, இது தொடர்பாக மாநிலங்கள் ஏற்கெனவே பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன என்று தெரிவித்தார்.


இதனைத்தொடர்ந்து நீதிபதிகள், தொற்று நோயில் இருந்து முதியவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களிட மிருந்து கோரிக்கை வரும்போதெல்லாம் அதன்பேரில் சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியான நேரத்தில் அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


 


பிளஸ் 1 மதிப்பெண் பட்டியல் இன்று முதல் வினியோகம்


சென்னை, ஆக.5 பிளஸ் 1 மாணவர் களுக்கு மதிப்பெண் பட்டியல், இன்று முதல் வரும், 12ஆம் தேதி வரை வழங்கப் பட உள்ளது. மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல், இன்று முதல் வழங்கப்பட உள்ளது.


ஒவ்வொரு பள்ளியிலும், தேர்வு துறையின் இணையதளத்தில், மாண வர்களின் மதிப்பெண் பட்டி யலை, தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.அதன்பின், மாணவர்களை வரவழைத்து, மதிப் பெண் பட்டியலில் சான்றொப்பமிட்டு வழங்க வேண்டும். வரும், 12ஆம் தேதிக்குள் மாணவர்களுக்கு மதிப் பெண் பட்டியலை வழங்கி முடிக்க வேண்டும் என, அரசு தேர்வுத் துறை இயக்குனரகம் அறிவுறுத்தியுள் ளது.


பிளஸ் 1 மாணவர்களுக்கு, மதிப் பெண் பட்டியல் மட்டுமே வழங் கப்படும். அவர்கள், பிளஸ் 2 முடித்த பின், அரசு தேர்வு துறையால் அச் சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.


அந்த சான்றிதழ் வழங்கும் வரை மட்டுமே, தற்போதைய மதிப்பெண் பட்டியல் செல்லத்தக்கது என, அறி விக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment