பன்னாட்டு விண்வெளி ஆய்வு மய்யத்தில் 2 மாத ஆய்வுக்குப்பின் நாசா விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 5, 2020

பன்னாட்டு விண்வெளி ஆய்வு மய்யத்தில் 2 மாத ஆய்வுக்குப்பின் நாசா விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினர்


வாசிங்டன், ஆக.5, அமெ ரிக்காவை சேர்ந்த தனியார் விண் வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், பன்னாட்டு விண்வெளி ஆய்வு மய்யத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத் திற்காக டிராகன் 2 விண்கலத்தை உருவாக்கியது.


கடந்த மே மாதம் 31ஆம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவுதளத்திலிருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் பாப் பென்கென் மற்றும் டக் ஹர்லி ஆகிய 2 அமெரிக்க விண்வெளி வீரர்கள் டிராகன் 2 விண்கலத்தில் பன்னாட்டு விண்வெளி மய்யத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் பன்னாட்டு விண்வெளி ஆய்வு மய்யத்தில் 2 மாத காலமாக தங்கி ஆய்வு மேற்கொண்ட நாசா விண்வெளி வீரர்கள் பாப் பென்கென், டக் ஹர்லி ஆகிய இருவரும் தங்கள் ஆய்வுப் பணிகளை முடித்துக்கொண்டு கடந்த 1ஆம் தேதி டிராகன் 2 விண்கலத்தில் பூமியை நோக்கிப் புறப்பட்டனர்.


விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியத்துவம் பெற்ற இவர்களின் வருகை அறிவியல் உலகில் முக்கிய கவனம் பெற்றது. பன்னாட்டு விண்வெளி ஆய்வு மய்யத்திலிருந்து 19 மணி நேர பயணத்துக்குப் பின் மெக்சிகோ வளைகுடாவில் உள்ள பென்சாகொலா கடலில் பாராசூட் மூலம் டிராகன் 2 விண்கலம் வெற்றிகரமாக நீரில் இறங்கியது.


அதன் பின்னர் விண்கலத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற் றப்பட்ட பாப் பென்கென் மற்றும் டக் ஹர்லி ஆகிய இருவரும் கப்பல் மூலம் கரைக்கு அழைத்துச் செல்லப் பட்டனர்.


பன்னாட்டு விண்வெளி ஆய்வு மய்யத்திலிருந்து பூமி வரையிலான அவர்களின் பயணத்தை நாசாவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் தீவிர மாக கவனித்து வந்தன. பூமிக்கு வந்திறங்கிய விண்வெளி வீரர் களுக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள் ளப்பட்டன.


அமெரிக்காவில் 45 ஆண்டு களுக்குப் பிறகு முதல் முறையாக ஸ்பிளாஷ் டவுன் என்று சொல் லப்படும் தண்ணீரில் விண்கலம் தரையிறங்குவதை நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் வெற்றிகரமாக நிகழ்த் தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment