புதுடில்லி, ஆக.15 இன்று டில்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியபொழுது,
எல்லையில் உள்ள பாதுகாப்பு வீரர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி என்றும், கரோனாவுக்கு எதிராகப் போராடும் முன்களப் பணியாளர்களை நாம் நினைவு கூர வேண்டும் என்றும், நம் நாட்டிற்காக போராடிக் கொண்டிருக்கும் முன்களப் பணியாளர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், கரோனா வைரசால் உயிரிழந்த வர்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும், கரோனா காலத்தில் எண்ணிலடங்காத வென்டிலேட்டர்களை இந்தியாவில் உருவாக்கியிருக்கிறோம். கரோனா காலத்தில் 80 கோடி இந்தியர்களுக்கு இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும், கரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என்றும் கூறினார்.
No comments:
Post a Comment