இந்திய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 22, 2020

இந்திய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்

புதுடில்லி, ஆக. 22- கடந்த 2018 ஜனவரியில் இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப் பட்ட அசோக் லவாசா  பத விக் காலம் 2022 வரை உள்ள நிலையில், ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவர் திவாகர் குப்தா இந்த மாதம் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, அந்த பதவிக்கு அசோக் லவாசா நியமிக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது.


தலைமை தேர்தல் ஆணை யர் சுனில் அரோராவுக்கு அடுத்த மூத்த தேர்தல் ஆணை யராக இருந்த அசோக் லவாசாவின் பதவி விலகலைத் தொடர்ந்து ஆக.31இல் விடுவிக் கப்படுகிறார். அவரது இடத் தில் புதிய தேர்தல் ஆணைய ராக ராஜீவ் குமார் நியமிக்கப் பட்டுள்ளார். ஜார்கண்டை சேர்ந்த 1984ஆம் ஆண்டு அய்.ஏ.எஸ் அதிகாரியான ராஜீவ் குமார், மத்திய நிதித் துறை செயலாளராக பணி யாற்றி ஓய்வு பெற்றவர். நிதிச் சேவை செயலாளராகவும் இருந்துள்ளார்.


No comments:

Post a Comment