ரஷ்ய பல்கலைக்கழகங்களில் மருத்துவ மாணவர்களுக்கு இணைய வழியில் பாடங்கள்: ரஷ்ய துணை தூதர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 22, 2020

ரஷ்ய பல்கலைக்கழகங்களில் மருத்துவ மாணவர்களுக்கு இணைய வழியில் பாடங்கள்: ரஷ்ய துணை தூதர் தகவல்

 சென்னை,  ஆக. 22-- ரஷ்யப் பல்கலைக்கழங்களில் நடப்புக் (2020-ஆவது) கல்வி யாண்டில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புக்கு சேரவிருக்கும் இந்திய மருத் துவ மாணவர்களுக்கு, இணைய வழியில் பாடங்களைத் தொடங்க முடிவு செய்யப் பட்டுள்ளது.


இந்த இணைய வழியில் வகுப்புகள் வரும் செப்டம்பர்  -  அக்டோபரில் தொடங்கி, நடப்புக் கல்வியாண்டு முழு வதும் நடைபெறும். கோவிட் 19 பெருந்தொற்று காரண மாக, பன்னாட்டு விமானப் பயணங்கள் தடை செய்யப் பட்டுள்ளதால் ரஷ்யப் பல் கலைக்கழகங்கள் இந்த முடிவை எடுத்துள்ளன.


இந்தியாவின் எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்புக்கு இணை யாக, ரஷ்ய மருத்துவப் பல் கலைக்கழங்கள் எம்.டி.  என்ற பெயரில் இளநிலை மருத்து வப் பட்டங்களை வழங்குகின் றன. இதை ஆங்கில மொழி யில் கற்பதானால் 6 ஆண்டு களும், ரஷ்ய மொழியில் கற்பதானால் 7 ஆண்டுகளும் (இதில் ஓராண்டு ரஷ்ய மொழி கற்பித்தல் இடம் பெறும்) படிக்க வேண்டியிருக் கும். உலக சுகாதார நிறுவனத் தின் அங்கீகாரத்துடன், இந் திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரமும் பெற்ற சுமார் 100 அரசு மருத்துவப் பல் கலைக்கழகங்கள் தற்போது ரஷ்யாவில் செயல்பட்டு வரு கின்றன.


இந்திய மாணவர்கள் உள் நாட்டிலோ, வெளிநாடுக ளிலோ மருத்துவக் கல்வி பயில விரும்பினால், அதற்கு நீட் தேர்வில் வெற்றி பெறு வது தற்போது கட்டாயமா கும். ஆனாலும், ரஷ்யப் பல் கலைக்கழகங்களில் தற்போது நடைபெறும் மாணவ சேர்க் கையின்போதே அதற்கான சான்றிதழைத் தர வேண்டும் என்ற கட்டாயமில்லை. தேர்வு முடிந்து மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு - அதாவது செப்டம்பர் மாத இறுதியில் தந்தால் போதும் என்றார். 


ரஷ்யப் பல்கலைக்கழகங் களில் மருத்துவக் கல்வி பயில விரும்புவோர் மேலும் தகவல் பெறவும், அதற்கான முன் பதிவை தொடங்கவும் www.studyabroadedu.com என்ற இணைய தளத்தையோ. 92822 21221 என்ற தொலைப் பேசி எண்ணையோ தொடர்பு கொள்ளலாம் என தென்னிந் தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர்  அலியக் என். அவ்தீவ் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment