புதுச்சேரி,ஆக.13- புதுச்சேரி யில் கரோனா பரவலைக் கட் டுப்படுத்த, செவ்வாய்க்கிழமை களில் தளர்வுகளில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படு வதாக முதலமைச்சர் நாரா யணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் கடைகள் திறக்கும் நேரம் 2 மணி நேரம் குறைக்கப்பட்டு காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
புதுச்சேரியில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக, மருத்துவமனைகளில் உள்ள அனைத்துப் படுக்கைகளும் நிரம்பிவிட்டன. இதனால் 41.78 சதவீத கரோனா நோயா ளிகள் வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். நேற்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக 481 பேர் கரோனா தொற்றால் பாதிக் கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,381 ஆகவும், கரோனாவால் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 96 ஆக வும் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறும்போது, புதுச்சேரியில் கடந்த 4 நாட்களாகக் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று அதிகபட்சமாக 1,123 பேருக் குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச் சேரியில் 413 பேர், ஏனாமில் 67 பேர், மாஹேவில் ஒருவர் என 481 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்பது குறிப் பிடத்தக்கது
No comments:
Post a Comment