சண்டிகர், ஆக. 13- பஞ்சாபில் அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு திறன்பேசிகள் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைமையிலான அரசு அறிவித்திருந் தது. அதன்படி, அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் காணொலி வாயிலாக அரசுப் பள்ளிகளில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இல வச திறன்பேசிகள் வழங்கும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார்.
மாநில இளைஞர்களுக்கு இலவசத் திறன்பேசிகள் வழங் குவது 2017 சட்டமன்றத் தேர் தலின் போது காங்கிரஸின் முக்கியத் தேர்தல் வாக்குறுதிக ளில் ஒன்றாகும். முதல்வர் அமரீந்தர் சிங் வீடியோ கான் பரன்சிங் மூலம் மாணவர்க ளுக்கு திறன்பேசி வழங்கும் (பஞ்சாப் ஸ்மார்ட் இணைப் புத் திட்டம்) திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
12 வகுப்பில் பயிலும் ஆறு மாணவர்களுக்குத் திறன்பேசி களைத் தானே நேரடியாக வழங்கி முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார். பஞ்சாப் மாநிலம் முழுவதும் நேற்று 26 இடங்களில் அமைச் சர்கள், சட்டமன்ற உறுப்பி னர்கள் தொலைப்பேசிகளை மாணவர்களுக்கு வழங்கினர்.
இந்த ஆண்டில் நவம்பர் மாதத்தில் அரசுப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் 1,74,015 மாணவர்கள் இந்த திட்டத்தால் பயன்பெறுவர் என அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் பயனாளி களின் 1.11 லட்சம் மாணவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த வர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. திட்டத்தைத் தொடங்கி வைத்து பேசிய முதல்வர், “தேர்தல் அறிக்கையில் பட் டியலிடப்பட்டுள்ள வாக்குறு திகளை மக்கள் நம்புகிறார்கள். எனவே, அவை ஒவ்வொன் றையும் செயல்படுத்துவதை உறுதி செய்வது என்னுடைய கடமை. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் திறன்பேசி மிக வும் செயல்திறன்மிக்கதாகும். இது மாணவர்களின் கல் விக்கு ஒரு முக்கியக் கருவியாக மாறும்’’ என்றார்
பஞ்சாப் மாநில கல்வி அமைச்சர் விஜய் இந்தர் சிங்லா கூறுகையில், இந்தத் திறன்பேசிகளுக்காக ரூ.92 கோடி செலவிடப்படுகிறது என்றார்.
No comments:
Post a Comment