கரோனா பரவல் கட்டுக்கடங்காது செல்வதால் கண்காணிப்பு காவல்துறை வசம் ஒப்படைப்பு: கேரள முதல்வர் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 4, 2020

கரோனா பரவல் கட்டுக்கடங்காது செல்வதால் கண்காணிப்பு காவல்துறை வசம் ஒப்படைப்பு: கேரள முதல்வர் பேட்டி

திருவனந்தபுரம், ஆக. 4- கரோனா பரவல் கட்டுக்கடங்காது செல்வதால் கண்காணிப்பு காவல்துறை வசம் மாற்றப்பட்டதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:


’’கேரளாவில் கடந்த சில தினங் களாகக் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. தினமும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி யும், ஆயிரத்தை நெருங்கியும் வருகி றது.


கேரளாவில் கரோனா நோயாளி களுடன் தொடர்பில் இருப்பதன் மூலம் நோய் பரவுவது அதிகரித்து வருகிறது. எனவே, கட்டுப்படுத்தப் பட்ட பகுதிகளைக் கண்டறியும் பொறுப்பை காவல்துறையினரிடம் விடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் இப்பகுதிகளின் பொறுப்பு சுகாதார ஆய்வாளரிடம் இருந்தது. நோய்ப் பரவலின் வேகம் அதிகரித்து வருவதால் இந்த பொறுப்பு தற்போது காவல்துறை வசம் ஒப்படைக்க தீர் மானிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு மாவட்டத்திலும் அந் தந்த மாவட்ட காவல்துறை கண்கா ணிப்பாளர் தலைமையில் கட்டுப் படுத்தப்பட்ட பகுதிகளைக் கண் காணிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தனிமையில் இருப்பவர்கள் வெளியே செல்வது மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக் காதது உட்பட நிபந்தனைகளை மீறு வது அதிகரித்து வருகிறது. எனவே இதுபோன்று நிபந்தனைகளை மீறு பவர்களைக் கண்டுபிடிக்க காவல் துறை கடும் நடவடிக்கைகளில் ஈடு படுவார்கள். கரோனா நோயாளிக ளுடன் முதல் நிலை மற்றும் இரண் டாம் நிலை தொடர்பில் இருப்பவர் களைக் கண்டுபிடிக்க ஒவ்வொரு பகு தியிலும் காவல்துறை உதவி ஆய்வா ளர் ஒருவர்  தலைமையில் தனிப்படை அமைக்கப்படும். இவர்கள் நோயாளி கள் எங்கெங்கு சென்றார்கள், அவரு டன் தொடர்பு வைத்திருந்தவர்கள் யார், யார் என்ற விவரங்களைச் சேக ரிப்பார்கள். மருத்துவமனைகள், சந் தைகள் உள்பட ஆட்கள் கூடும் இடங் களில் பொதுமக்கள் சமூக இடைவெ ளியைக் கடைப்பிடிக்கிறார்களா, முகக்கவசம் அணிந்துள்ளார்களா என்பதைக் காவல்துறையினர் கண் காணிப்பார்கள். இப்பணிகளை ஒருங்கிணைப்பதற்கு கொச்சி காவல் துறை ஆணையர் விஜய் சாக்கரே தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கேரளாவில் நோய்ப் பரவல் அதிகரித்து வருவதால் நமது அனைத்து சக்திகளையும் பயன் படுத்தி நோய்ப் பரவலைக் கட்டுப் படுத்த வேண்டும்.


கேரளாவுக்கு இதுவரை வெளி நாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 7,03,977 பேர் வந்துள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து 4,34,491 பேரும், வெளிநாடுகளில் இருந்து 2,69,486 பேரும் வந்தனர். இவ்வாறு வந்தவர்களில் இதுவரை 3, 672 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் அனை வருக்கும் சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள் ளன. மேலும் அவர்கள் மூலம் நோய் பரவாமல் இருப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டன.


இது தொடக்கத்தில் மிக நல்ல பலனைத் தந்தது. ஆனால் ஒரு கட்டம் முடிந்த பின்னர் சிலரது அலட்சியம் காரணமாக தற்போது நோய்ப் பரவல் அதிகரித்துள்ளது. நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவ தில் சில தவறுகள் நேர்ந்துள்ளன என்பதை மறுக்க முடியாது. எனவே, நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதற் காக மேலும் சில கடுமையான நிபந் தனைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.


இதனால் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து குறுகியகால பயணத்திற்காகக் கேரளா வருபவர்க ளுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கடுமையான நிபந்தனைகள் பலருக் குச் சிரமத்தை ஏற்படுத்தினாலும், அது நாட்டின் நன்மைக்காக என்றே அனைவரும் கருதவேண்டும். எனவே அரசின் நடவடிக்கைகளுக்கு வழக்கம் போல பொதுமக்கள் ஆதரவும் ஒத் துழைப்பும் தர வேண்டும்’’.


இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment