ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 4, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் தரப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கையை தமிழ் நாடு அரசு ஏற்காது என முதல்வர் பழனிச்சாமி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப் பிட்டுள்ளார்.

  • உலகை உலுக்கும் ரேன்சம்வேர் எனும் வைரஸ் அமெரிக்கத் தேர்தல் வாக்கெடுப்பு இயந்திரத்தையும் தாக்க வாய்ப்புண்டு என அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிகளுக்கான வாய்ப்பு முந்தைய மாதங்களைக் காட்டிலும் ஜூலை மாதத்தில் 57 சதவீதம் குறைந்துள்ளது.


டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:



  • தமிழக அரசின் அமைச்சரவை, ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுவிக்கத் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அதில் ஒருவரான பேரறிவாளனின் பிணை மனுவை எதிர்ப்பது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளது.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி:



  • அயோத்தியில் ராமன் கோயில் பரஸ்பர இசைவுக்கு எதிராகக் கட்டமைக்கப்படுகிறது என்பதை உணராமல், பாஜக இயங்குகிறது என்றால், மற்ற கட்சிகள் அமைதி காத்து அதை ஏற்கின்றனர் என எழுத்தாளர் சுகாஸ் பால்சிகர் தனது கட்டு ரையில் தெரிவித்துள்ளார்.

  • புதிய கல்விக் கொள்கையில், மொழி குறித்த அறிவிப் புகளால் ஏற்படும் சமத்துவமின்மை பிரச்சினையை சரியாகக் கையாளவில்லை என புனே பல்கலைக்கழகப் பேராசிரியர் தன்மஞ்சரி சாதே தனது கட்டுரையில் விவரித்துள்ளார்.

  • அயோத்தியில் ராமன் கோயில் பூமி பூஜை, ஹிந்து ராஷ்டிரத்துக்கான முதல் நினைவுச் சின்னம் என மூத்த பத்திரிக்கையாளர் சபா நக்வி தனது கட்டுரையில் கூறியுள்ளார்.


 தி இந்து, டில்லி:



  • காஷ்மீருக்கான 370ஆவது சரத்து ரத்து செய்யப்பட்டு ஆகஸ்டு 5ஆம் தேதி ஓர் ஆண்டு ஆகும் நிலையில் இது குறித்த பிரச்சினையை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹேப்பிமோன் ஜேக்கப் தனது கட்டுரையில் விவரித்துள்ளார்.

  • வலதுசாரி ஜனரஞ்சகம் திறம்பட வெற்றிபெற முற்படும் கடைசிக் கோட்டையாக இந்து பழமைவாதம் உள்ளது என அரசியல் விமர்சகர் சஜ்ஜன் குமார் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

  • 370ஆவது சட்டம் ரத்து, கூட்டாட்சிக்கும் அனைவரையும் உள்ளடக்கிய செயல்பாட்டுக்கும் எதிரானது என காஷ்மீர் மா நில மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தரிகாமி தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்..


- குடந்தை கருணா


4.8.2020


No comments:

Post a Comment