கோமியம் குடித்தால் கரோனா குணமாகாது பா.ஜ.க. தலைவர்களின் கருத்துக்கு மேகாலயா ஆளுநர் ததகதா ராய் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 15, 2020

கோமியம் குடித்தால் கரோனா குணமாகாது பா.ஜ.க. தலைவர்களின் கருத்துக்கு மேகாலயா ஆளுநர் ததகதா ராய் கண்டனம்


கொல்கத்தா,ஆக.15, மேகாலயா ஆளுநர் ததகதா ராய் ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு  அளித்துள்ள பேட்டியில், பா.ஜ.க. தலைவர்கள் சிலர் பசு கோமியம் அல்லது பசுஞ்சாணி ஆகியவற்றில் கரோனா வைரசுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருப்பதாக பிரச்சாரம் செய்வதை பார்த்து மனம் வேதனைப்படுகிறது. இதுபோன்ற பேச்சுக்கள் பசும்பாலில் தங்கம் இருப்பது போன்ற கருத்துகள் எல்லாம் நகைப்புக்குரியதாக மாறிவிட்டன. நான் தனிப்பட்ட நபர்களை குற்றம் கூறவில்லை. விமர்சனம் செய் கிறேன் . பசு கோமியம் தொடர்பான கருத்துக்கள், எனக்கு தனிப்பட்ட முறையில் வேதனையையும் அவமா னத்தையும் ஏற்படுத்துகின்றன. சமூக வலைத் தளங்களில் ஆக்டிவாக உள்ளேன். பல புத்தகங்களை எழுதியுள்ளேன். என்னை விமர்சனம் செய்பவர்கள் பசுச் சாணம், கோமியம் போன்றவற்றைக் குடிக்குமாறு திட்டுகிறார்கள்.


நான் இதற்காக இது போன்ற பேச்சுகளை தாங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. பசு தொடர்பான அறிவியல் பூர்வமற்ற கருத்துகளை எங்கள் கட்சியினர் பகிர்வ தால்தான் இது போன்ற பேச்சுகளைக் கேட்க வேண்டியிருக்கிறது. கோமியத்தைக் குடிக்குமாறு கூறும் கருத்துகள் எது வுமே அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் படாதவை என்றார்.


மேற்கு வங்க மாநில பாஜக தலைவராக இருந்தவரும், தற்பொழுது மேகாலயாவின் ஆளுநராகவும் உள்ள ததகதா ராய் பதவிக்காலம் கடந்த மே மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், தற்போது அவருக்கு பதவி நீட்டிப்பு செய்யப் பட்டுள்ளது.


தற்போது மேற்கு வங்க மாநில பா.ஜ.க. தலைவராக உள்ள திலிப் கோஷ், பசுக் கோமியம் கரோனா வைரஸை குணப்படுத்தும் என்று கூறியிருந்த நிலையில், மேகாலயா ஆளுநர் ததகதா ராய் கருத்து வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment