அய்தராபாத்,ஆக.6, தெலங்கானா மாநிலத்தில் கரீம் நகரில் பெண் ணுக்குப் பேய் பிடித்திருப்பதான மூடநம்பிக்கையால் அப்பெண் மரணம் அடைந்துள்ளார். பேயை ஓட்டுவதாக பெண்ணைக் கொலை செய்த வழக்கில் மோசடி சாமியார் ஷியாம் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெலங்கானா மாநிலம் கரீம் நகரைச் சேர்ந்தவர் மல்லேஷ் என்பவரின் மனைவி ரஜிதா. கர்ப்பிணியாக இருந்த ரஜிதாவுக்கு 2 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. அதன் பின்னர் அவர் மிகவும் உடல் நலிவுற்று இருந்துள் ளார். அவள் கணவன் மல்லேஷின் மூடநம்பிக்கையால், தன்னுடைய மனைவிக்குப் பேய் பிடித்திருப்ப தாகக் கருதி, மோசடி சாமியார் ஷியாம் என்பவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
ரஜிதாவின் மீதுள்ள பேயை ஓட்டுவதாகக்கூறி சாமியார் ஷியாம் சரமாரியாக அடித்துத் துன் புறுத்தியிருக்கிறார். ரஜிதா மயக்க மடைந்து சாய்ந்துவிட்டதையடுத்து அவரை அருகிலிருந்தவர்கள் மருத் துவமனைக்கு அழைத்து சென்றுள் ளனர். அங்கு பரிசோதித்த மருத் துவர்கள், ரஜிதா ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். மேலும், உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவரை இத்தனை நாட் களாக ஏன் சிகிச்சைக்கு அனுமதிக்க வில்லை என கேள்வி எழுப்பி யுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ரஜிதாவின் உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
சாமியார் ஷியாம் மற்றும் மல் லேஷின் உறவினரைக் காவல்துறையினர் கைது செய்தனர். தலை மறைவான ரஜிதாவின் கணவன் மல்லேஷைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
மகப்பேறுக்குப் பின்னர் உடல் நிலைக்குறைவு என்றால், மருத் துவமனையில் உரிய சிகிச்சை கொடுத்து ஓய்வு எடுக்கச் செய் யாமல், பேய் ஓட்டுவது என்கிற மூடநம்பிக்கையால், அப்பெண் ணைக் கண்மூடித்தனமாக உயிர் போகும்வரை அடித்தே கொலை செய்திருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment