விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் மூத்த சகோதரியான கு.பானுமதி (வயது 65) உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
அரியலூர் மாவட்டம், அங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த அவருக்கு இளைய ராஜா, இசையமுதன் ஆகிய மகன்களும் மாலதி என்ற மகளும் உள்ளனர். அவரது கணவர் மறைவுற்ற நிலையில் சென்னையில் வசித்து வந்தார். மூன்று வாரங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட கு.பானுமதி, உடல்நலம் நன்றாகத் தேறி வந்தார். இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) காலை உடல் நலக் குறைவு ஏற்பட்டு மறைவுற்றார்.
மறைவு செய்தியறிந்ததும் நேற்று (5.8.2020) மாலை தொல்.திருமாவளவன் அவர்களிடம் தமிழர் தலைவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment