முஸ்லிம்கள் ஒழிக! என்றீர்களே... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 8, 2020

முஸ்லிம்கள் ஒழிக! என்றீர்களே...

தஞ்சை மாவட்ட பாஜக தலைவர் பண்ணைவயல் இளங்கோ. இவருடைய மாமா கருணாநிதி. பட்டுக்கோட்டை நகர பாஜக தலைவர்.


கொரோனா தொற்றின் காரணமாக கருணாநிதி இறந்துவிட்டார். கொரோனாவிற்குப் பயந்து சொந்தம், பந்தம், உற்றார், உறவினர் எல்லாம் ஓடி ஒளிந்து கொண்டனர்.


பிணத்தைத் தூக்கி அடக்கம் செய்ய ஆர்.எஸ்.எஸ்., இந்து மக்கள் கட்சி, பாஜக, அனுமன் சேனா, இந்து முன்னணி, சேவா பாரதி, விவேகானந்த பவுண்டேஷன், பஜ்ரங் தள் உள்ளிட்ட எந்த இந்து அமைப்புகளும் முன் வரவில்லை.


இந்துத்துவப் பெருமை பேசி, விநாயகர் சதுர்த்திக்குப் பணம் வசூலித்து தெருவெல்லாம் கத்திக் கொண்டு செல்வது, இராமன் பெயரில் எளியவர்களைத் துன்புறுத்துவது, பாரத மாதா என தேசப் பக்தி வேசம் போடுவது மட்டுமே இவர்கள் வேலை.


இந்நிலையில் பா.ஜ.கவைச் சேர்ந்த  குடும்பத்தினர், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தை அழைத்து உதவி கோரினர். தன்னலம் கருதாத இஸ்லாமியத் தோழர்கள், பாதுகாப்பு உடைகளோடு வந்து, பா.ஜ.க. தலைவரின் உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்துள்ளனர்.


கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில், தப்லிக் ஜமாத் மாநாட்டைக் காரணம் காட்டி, இஸ்லாமியர்கள் தான் நோயைப் பரப்புகிறார்கள் என அவதூறு பரப்பிய பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் யாரும் இந்தப் பேரிடர் காலத்தில் உதவிகள் செய்யவில்லை.


மாறாக, அவர்களுக்கும் சேர்த்து இஸ்லாமிய சகோதரர்கள் தான் சேவை செய்துள்ளனர்.


- கபிலன் காமராஜ்


பேஸ்புக்கிலிருந்து...


No comments:

Post a Comment