சென்னை,ஆக.4, திமுக குறித்தும், கலைஞர் குறித்தும் இணையத்தில் யூடியூப்பில் அவதூறு பரப்பிவரும் மாரிதாஸ் என்பவர்மீது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழக்கு தொடுத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில், சேனல்களில் திமுக குறித்தும், தன்னைப்பற்றியும் அவதூறு பரப்பும் நபர்கள்மீது காவல் துறையில் உதயநிதி ஸ்டாலின் புகார் அளித்துள்ளார். அதன்படி கடந்த வாரம் தன்னைப்பற்றி அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக மதன் ரவிச்சந்திரன்மீது உதயநிதி ஸ்டாலின் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். உதயநிதி மான்கறி சாப்பிட்டதாக அவதூறு பரப்பியதற்காக மதன் ரவிச்சந்திரன்மீது உதயநிதி ஸ்டாலின் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த நிலையில், கலைஞர்குறித்தும் தி.மு.க. குறித்தும் அவதூறு பரப்பும் பல்வேறு வீடியோக்களை மாரிதாஸ் வெளியிட்டு இருக்கிறார். இந்த காணொலிகளை குறிப்பிட்டு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் உதயநிதி வழக்கு தொடுத்துள்ளார்.
No comments:
Post a Comment