உடற்பயிற்சிக்கூடங்கள், யோகா மய்யங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசு வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 4, 2020

உடற்பயிற்சிக்கூடங்கள், யோகா மய்யங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசு வெளியீடு

புதுடில்லி,ஆக.4 நாடு முழுவதும் 5.8.2020 முதல் உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா மய்யங்கள் திறக்கப்பட உள்ள நிலையில் அவைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:


உடற்பயிற்சிக் கூடங்கள் (ஜிம்), யோகா மய்யங்களில் தனிமனித இடைவெளியை அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். உரிய இடைவெளியுடன் உடற் பயிற்சி உபரகணங்கள் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஒரு நபருக்கு 4 மீட்டர் சதுர அளவு ஒதுக்கப்பட வேண்டும்.


நுழைவு வாயில்களில் சானிடைசர் வைப்பது, தெர்மல் பரிசோதனை செய்வது கட்டாயமாகும்.


முககவசம் அணிந்திருந்தால் மட்டுமே உள்ளே நுழைவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.


95 சதவீதத்துக்கும் குறைவாக ஆக்சிஜன் செறிவு உள்ளவர்களை உடற்பயிற்சி செய்வ தற்கு அனுமதிக்க கூடாது.


கட்டுப்படுத்தப்பட்ட சிவப்பு மண்டலங் களில் உடற்பயிற்சிக்கூடங்கள் (ஜிம்), யோகா மய்யங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.


ஸ்பாக்கள், நீராவி குளியல், நீச்சல் குளங்கள் ஆகியவற்றை திறப்பதற்கு அனு மதி அளிக்கப்படவில்லை.


No comments:

Post a Comment