பிரதமர் மோடியிடம் தொலைப்பேசியில்
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை,ஆக.4, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் நேற்று (3-.8.-2020) தொலைப்பேசி வாயிலாக பேசியபோது வலியுறுத்திய தாவது,
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்றும் மத்திய - மாநில அரசுகளின் சுகாதாரத் துறை அதிகாரிகள், இந்திய மருத்துவக் கவுன்சில் என மூன்று தரப்புக் குழு அமைத்து, கலந்தாலோசித்து இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறைகள் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் மூன்று மாதங்களில் முடிவை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
No comments:
Post a Comment