புதுடில்லி,ஆக.13, காஷ்மீர் மாநில ஆளுநர் பதவியிலிருந்து விலகிய ஜி.சி முர்மு இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த அய்ஏஎஸ் அதிகாரி யான இவர் மோடியின் தீவிர விசுவாசியாவார். குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது அவரிடம் முதன்மைச் செயலாளராக இருந்தவர். அதற்கு முன்பு குஜராத் உள்துறை அமைச்சராக அமித்ஷா இருந்த போது உள்துறையில் இணைச் செயலாளராக பணியாற்றியவர். குஜராத் கலவரத்தின்போது மோடி மற்றும் அமித்ஷாமீதான குற்றச் சாட்டுகளை மறைக்க இவர் கார ணமாக இருந்தார் என்று ஊட கங்களில் பேசப்பட்டது, இருப் பினும் இவர் குஜராத் கலவரம் தொடர்பான எந்த ஒரு விசா ரணை வளையத்திற்குள்ளும் வரவில்லை. 1985ஆம் ஆண்டு பேட்ச் அய்.ஏ.எஸ். அதிகாரியான அவர் தற்போது சி.ஏ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
(குஜராத் மாநிலத்தில் படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளார் முர்மு.)
No comments:
Post a Comment