போலி இ-பாசை தடுக்க நடவடிக்கை : அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 13, 2020

போலி இ-பாசை தடுக்க நடவடிக்கை : அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஆக.13 கரோனா ஊரடங்கினால் மாவட்டத்தை விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியம். எனவே பொது மக்கள் நலன் கருதி போலி இ-_பாசை தடுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.


கரோனா ஊரடங்கினால் மாவட்டத்தை விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியமாக உள் ளது. ஆனால், அவசர தேவைக் காக இ-_பாஸ் கேட்டு விண்ணப் பம் செய்யும் மக்களுக்கு கிடைப்பது இல்லை. இடைத் தரகர்கள் மூலம் விண்ணப்பித் தால் மட்டுமே கிடைக்கிறது என்ற குற்றச்சாட்டு தமிழகத்தில் எழுந்தது.


கடந்த வாரம் குழந்தை தொழிலாளர்களை திருவண் ணாமலை மாவட்டத்தில் இருந்து அவிநாசிக்கு இ-பாஸ் எதுவும் இல்லாமல் அழைத்து சென்றது உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட் டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலைகளிலும்கூட லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை, ரத்த தாகம் பிடித்து அலையும் ஓநாய்கள் என்று கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த நிலையில், இ-_பாஸ் தொடர் பான ஒரு வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜ ரான சிறப்பு பிளடர், இ_-பாஸ் வழங்கும் முறையில் உள்ள சிக் கல்களை களைய ஒரு கமிட்டியை அரசு உருவாக்கியுள்ளதாக கூறி னார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த கமிட்டி போலி இ-_பாஸ், இ_-பாசை தவறாக பயன்படுத்தும் செயல் உள்ளிட்ட விவகாரத் தையும் ஆராய்ந்து அதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.


 


No comments:

Post a Comment