ஈத்து உவக்கும் இன்பத்தில் தலையாயது இசை இன்பம்; ஏதுமற்ற மற்றவர்களுக்கு இன்பந் தரும்படி பாடித் தொழில் வளர்ப்பதும் கொடைதான். பாட்டாளிகள், விவசாயிகள் தங்களின் வேலைப் பளுச் சுமையை மறந்து பணியாற்றி மகிழச் செய்வது இசை இன்பம் என்ற பெருவெள்ளம். அவ்வின்ப வெள்ளத்தை, கடந்த 40 ஆண்டுகளாய் நாடு முழுவதும் பரப்பி, தாமும் இன்புற்று, மற்றவரையும் இன்பம் பெறச் செய்த இசை உலகின் இணையற்ற பாட்டுத் திறனாளி பண்பாளர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் கரோனாவினால் போராடிக் கொண்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.
என்றாலும், அதிலிருந்து அவர் மீண்டு பழையபடி தன் இசையின்பத்தை எல்லோருக்கும் வாரி வழங்கிட விரைந்து நலம் பெற விழைகிறோம்.
- கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
18.8.2020
No comments:
Post a Comment