கல்லக்குறிச்சி, ஆக.18, கல்லக்குறிச்சியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தேசியக் கல்விக் கொள்கை, புதிய சூழலியல் மதிப்பீட்டு வரைவுக் கொள்கை இரண்டையும் எதிர்த்து நேற்று (17.8.2020) காலை 11.00 மணிக்கு அம்பேத்கர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ம.சுப்பராயன் தலைமை வகித்தார். இந்திய பொதுவுடைமைக் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் இரா.கஜேந்திரன், செ. இளையராஜா, சாமிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.மணிகண்டன் அனைவரையும் வரவேற்றார். இவ்வார்ப்பாட்டத்தில் கல்லை நகரத் தலைவர் ச.சுந்தரராசன், கல்லை மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.கரிகாலன், கல்லை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நா.பெரியார், ஆ.ராமலிங்கம், ஆ.பிரபு உள்பட பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்ட முழக்கங்களை முழங்கினார்கள். இராமகிருஷ்ணன் நன்றி கூறினார். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment