அரசுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து விநாயகர் கோவில் அமைப்பதா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 18, 2020

அரசுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து விநாயகர் கோவில் அமைப்பதா

அரசுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து விநாயகர் கோவில் அமைப்பதா?


வெள்ளகோவிலில் கழகத் தோழர்கள் புகார்



வெள்ளகோவில், ஆக.18 வெள்ளகோவிலில் தேசிய நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, கடந்த 13.8.2020 வியாழன் இரவோடு இரவாக விசுவ இந்து பரிஷத் மற்றும் இந்து முன் னணி ஆகிய  மதவாத அமைப்புகளைச் சார்ந்தவர்கள் விநாயகர் கோவில் என்ற பெயரில் மதவழிபாட்டுத்தலம் அமைத்தும் காவிக் கொடிகளை கட்டியும் மதம் சார்ந்த பிரச்சினை உருவாக்கிட திட்டமிட்டு செயல் பட்டு வருகின்றனர்.


இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைக்குட்பட்ட நிலத்தை ஆக்கிர மித்துள்ள மத வழிபாட்டுத்தலம்  உடனடியாக அகற்றப்படவேண்டும். மதம் சார்ந்த பிரச்சினைகளைத் தோற்றிவிப்பதன் ஒருபகுதியாக அரசு நிலத்தில் இரவோடு இரவாக மதவழிபாட்டுத்தலத்தை அமைத்த விசுவ இந்து பரிஷத் மற்றும் இந்து முன்னணி அமைப்புகளைச் சார்ந்த வர்கள் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்ற கோரிக் கைகளை முன்வைத்து நேற்று (17.8.2020) தாராபுரம் கழக மாவட்டச் செயலாளர் க.சண்முகம் தலைமையில் காங்கயம், வெள்ளகோவில் பொறுப் பாளர்கள் காங்கயம் உதவிப் பொறி யாளர் (தேசிய நெடுஞ்சாலைத் துறை) அலுவலகத்திலும், வெள்ள கோவில் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.


திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் செய்த பின் வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டது.


காவல் ஆய்வாளர் பார்வைக்குப் பின் இதுகுறித்து நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என தெரிவித்துள் ளனர். இந்த ஆக்கிரமிப்பு பிரச்சினை குறித்து நடவடிக்கை மேற்கொள் ளாமல் துறை சார்ந்த அதிகாரிகள் மெத்தனப் போக்கைக் கையாளுவது தொடர்ந்தால் மாவட்டப் பொறுப் பாளர்களை அணுகி தலைமைக் கழகத்தின் அனுமதி பெற்று அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற் கொள்ள காங்கயம், வெள்ளகோவில் நகர, ஒன்றிய  பொறுப்பாளர்கள் தயா ராகி வருகின்றனர்.


No comments:

Post a Comment