கலைஞரின் கடைசி யுத்தம் நூல் வெளியீடு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்  நூலை வெளியிட்டு பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 7, 2020

கலைஞரின் கடைசி யுத்தம் நூல் வெளியீடு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்  நூலை வெளியிட்டு பாராட்டு


சென்னை,ஆக.7, முத்தமிழறிஞர் கலைஞர் மறைவுற்றபோது, அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் கேட்டு தொடரப்பட்ட வழக்கை மய்யமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள, கலைஞரின் கடைசி யுத்தம் என்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமாகிய தளபதி மு.க.ஸ்டாலின் நேற்று (6.8.2020) நூலை வெளியிட்டார். முன்னாள் முதல்வர், திமுக தலைவருமாக இருந்த மானமிகு சுய மரியாதைக்காரர் முத்தமிழறிஞர் கலைஞர், கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி மறைந்தபோது, தமிழக அரசு மெரி னாவில் இடம் ஒதுக்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து, திமுக அமைப்புச் செய லாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர்நீதி மன்றத்தில் அன்றிரவே இதுதொடர்பாக வழக்குத் தொடர்ந்தார். மெரினாவில் திமுக தலைவருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், முத்தமிழறிஞர் கலைஞர் அவர் களின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த தீர்ப்பை வழங்கியது. இந்த வழக்கை மய்யமாகக் கொண்டு சன் செய்திகள் சிறப்புச் செய்தியாளரான டி.ரமேஷ் குமார் கலைஞரின் கடைசி யுத்தம் என்ற நூலை எழுதியுள்ளார். மேலும், சட் டத் துறையில் திமுகவின் போராட்டங் களையும் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த நூலில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அணிந்துரை  வழங்கியுள் ளார்.


திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, திமுக செய்தித்தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி.,  மாநிலங்களவை திமுக உறுப்பினர் வழக்குரைஞர் வில்சன், மாநிலங்களவை உறுப்பினர், மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ, தலைமை நிலைய அலு வலகச் செயலாளர்கள் துறைமுகம் காஜா,   பூச்சி எஸ்.முருகன், சட்டத்துறைச் செய லாளர் இரா.கிரிராஜன், சட்டமன்ற உறுப் பினர் வாகை சந்திரசேகர், சன்செய்திகள் சிறப்புச் செய்தியாளர் ஈவெரா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.


No comments:

Post a Comment