அண்ணாவின் கொள்ளுப்பேத்தி ராணி, கடலூர் கிருஷ்ணப்ரியா,பண்ருட்டி பிரியங்கா தமிழர் தலைவருக்கு நன்றி
அண்ணாவின் கொள்ளுப்பேத்தி ராணி
குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துத் தெரிவித்து, பாராட்டிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு அண்ணாவின் கொள்ளுப் பேத்தி ராணி, அவர் பெற்றோர் ராமமூர்த்தி-இளவரசி நன்றி தெரிவித்தனர்.
கடலூர் கிருஷ்ணப்ரியா
கடலூர் கிருஷ்ணப்ரியா தொலைப்பேசிமூலம் தொடர்பு கொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார்.
பண்ருட்டி ப்ரியங்கா
பண்ருட்டியைச் சேர்ந்த ப்ரியங்கா இந்தியக் குடிமைப்பணித் தேர்வில் (அய்.ஏ.எஸ்.,அய்.பி.எஸ்.) தேர்ச்சி பெற்றார். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு பிரியங்காவுக்கு வாழ்த்தினையும், பாராட்டினையும் தெரிவித்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ப்ரியங்கா நன்றியைத் தெரிவித்தார்.
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் பயனாடை அணி வித்து பாராட்டுத் தெரிவித்தார். பண்ருட்டி கோ.புத்தன், வடலூர் இராவணன், சி.மணிவேல், இரா.தமிழன்பன் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment