போபால், ஆக. 20-- ‘‘இனி அரசு வேலையில் மாநில இளை ஞர்கள் மட்டுமே பணியமர்த் தப்படுவார்கள். வெளி மாநி லத்தவர்களுக்கு அரசு வேலை கிடையாது’’ என மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஆட்சியில் அப் போதைய முதல்வர் கமல்நாத், 70 சதவீத அரசுப்பணி மாநில மக்களுக்கே வழங்கப்படும் என அறிவித்தார். அவரை விட ஒருபடி மேலே போயிருக் கிறார் அம்மாநிலத்தின் தற் போதைய பாஜ முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்.
இது தொடர்பாக அவர் தனது டிவிட்டரில் வெளியிட் டுள்ள வீடியோ செய்திக் குறிப்பில், ‘‘அரசு வேலைகளில் நமது மாநில மக்களுக்கு முன் னுரிமை தருவது பற்றிய முக் கிய முடிவினை எடுத்துள் ளோம். மத்தியப்பிரதேச மாநிலத்தின் வளங்களானது, இந்த மண்ணின் மைந்தர்க ளுக்கே உரியது. எனவே, இதை நடைமுறைப்படுத்துவ தற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அரசு வேலை இனி மாநில இளைஞர்களுக்கு மட்டுமே வழங்குவதற்கான புதிய சட்ட திருத்தம் விரை வில் கொண்டு வரப்படும்’’ என்று சிவராஜ் சிங் சவுகா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment