பா.ஜ.க.வுக்கு தமிழக அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை!
சென்னை, ஆக.21 அ.தி.மு.க.வினரை உரசிப் பார்க்கவேண்டாம் என்று பா.ஜ.க.வுக்குத் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அ.தி.மு.க. அரசு ஆண்மையான அரசா என்று எச்.ராஜா சொன்ன சொற்கள் அவருக்குத்தான் பொருந்தும். ஒரு டுவிட்டர் பதிவைப் போட்டு விட்டு ஓடி ஒளிந்து கொண்டவர் எச்.ராஜா. எச்.ராஜாவின் ஆண்மை குறித்து அனை வருக்கும் தெரியும்.
அ.தி.மு.க.வினரை எச்.ராஜா உரசிப் பார்க்கக் கூடாது. வரலாறு தெரியாமல் இன்றைய தலைமுறையை ஏமாற்றி வருகிறார்கள். விநாயகர் சதுர்த்தி விழாவில் நீதிமன்ற அறிவுரைகளைப் பின்பற்றுவோம்.
- இவ்வாறு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
No comments:
Post a Comment