தேசிய கல்விக் கொள்கையும், திலகரின் நச்சுச் சிந்தனைகளும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 16, 2020

தேசிய கல்விக் கொள்கையும், திலகரின் நச்சுச் சிந்தனைகளும்

சென்னை, ஆக. 16- திலகர், பெண்களும், பார்ப்பனரல்லாதோரும் கல்வி கற் பதை எதிர்த்தாரா? என்ற தலைப்பில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் பரிமளா வி.ராவ் எழுதிய வரலாற்று ஆதாரங்களுடன் கூடிய கட்டுரை பி.பி.சி. தமிழ் இணையத்தில் (11.8.2020) வெளியிடப்பட்டுள்ளது.


அதில் இருந்து சில தகவல்கள்:



  • "பிராமணர் அல்லாதவர்களுக்கு `தச்சு, பொற்கொல்லர், மேஸ்திரி, தையல் வேலை, வாழ்க்கையில் அவர் களின் நிலைக்கு ஏற்ற மிக சாதார ணமான தொழில்களைக்' கற்றுத்தர வேண்டும்" என்று திலகர் கூறினார். அதுதான் `கல்வியில் அறிவார்ந்த முறையாக இருக்கும்' என்று திலகர் கூறினார்.

  • 'சிறு விவசாயிகளின் பிள்ளைக ளுக்குக் கல்வி அளிப்பது பணத்தை வீணடிக்கும் செயல்' என்று திலகர் கூறினார்.

  • `அரசுப் பணம் என்பது வரி செலுத்துபவர்களின் பணம். அந்தப் பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை வரி செலுத்துபவர்களுக்கு தான் உள்ளது' என்று திலகர் கூறினார் (The Mahratta, 15 May 1881, Our system of Education-A Defect and a Cure).

  • நில உடைமை உள்ள பிராமணர்க ளுக்கு மட்டுமே கல்வி அளிக்கப்பட வேண்டும், ஏழை பிராமணர்களுக்கு கூட அளிக்கக் கூடாது என்று அவர் விரும்பினார் (The Mahratta, 21 August 1881, Our University III). திலகருடைய விமர்சனங்கள் தீவிரமான பிராமணர் அல்லாதோர் எதிர்ப்பை சம்பாதித் தன.

  • `ஜாதியத்தின் தாக்கம் இல்லாமல் போயிருந்தால் இந்து தேசம் என்பது நீண்ட காலத்துக்கு முன்பே காணா மல் போயிருக்கும்; ரானடே போன்ற சீர்திருத்தவாதிகள் ஜாதியை அழிக் கப் பார்க்கிறார்கள். தேசத்தின் உயிர்த் துடிப்பை அழிக்கப் பார்க்கிறார்கள்' என்று திலகர் கூறியுள்ளார்.

  • 'மத அடையாளங்கள் இல்லாத கல்வி முறை `மத அடிப்படைகளை மறுக்கும்' கருத்தை விதைப்பதாகக் கூறி அதை திலகர் நிராகரித்தார். 'பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்படும் மத அடிப்படையிலான கல்வி `மறுக் கக் கூடாத தூய்மை மற்றும் எளிமை யைக் கொண்டதாக இருக்க வேண் டும். கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று பள்ளிக்கூட மாணவர்களிடம் சொல்ல வேண்டும். அதற்கு எந்த மாணவராவது கண்ணால் காணும் ஆதாரம் கேட்டால், அவரை பிரம் பால் அடித்து மவுனமாக்கிவிட வேண் டும்' என்று திலகர் குறிப்பிட்டிருக் கிறார் (The Mahratta, 3 July 1904, Religion Education, Editorial).

  • `சதுர்வர்ணம் என்ற ஜாதிய முறை பிரிட்டிஷ் ஆட்சியில் சிதைந்து விட்டது' என்று கூறி ஹோம் ரூல் முறையைத் திலகர் வலியுறுத்தினார்.

  • `பெண்களின் பெண்மைக் குணங் களை நீக்குவதாக ஆங்கிலக் கல்வி முறை உள்ளது. அதனால் பெண்க ளின் மகிழ்ச்சியான உலக வாழ்க்கை மறுக்கப்படுகிறது' என்று திலகர் கூறினார் (The Mahratta, 28 September 1884).

  • பெண்களுக்கு `பிராந்தியக் கல்வி, நன்னெறிகள், ஊசி வேலைப் பாடுகள்' மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத் தினார். காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணி வரையில் பெண்கள் பள்ளிக்கூடம் செல்வதை அவர் எதிர்த்தார். காலை அல்லது மாலை யில் தினமும் 3 மணி நேரம் மட்டுமே பள்ளிக்கூடம் நடத்த வேண்டும். எனவே பெண்கள் தங்கள் வீட்டு வேலைகளைக் கவனிக்க நேரம் கிடைக்கும் (The Mahratta, 18 September 1887 Curriculum of the Female High School, Is It In The Right Direction?)) என்றும் திலகர் கூறினார்.

  • `பாடத் திட்டத்தை உடனடியாக சரி செய்யாவிட்டால், ராக்மாபாய் போல கணவரை மதிக்காத பெண்கள் உருவானால் ஆச்சரியப்பட வேண்டியிருக்காது' என்று ரானடேவுக்கு திலகர் எச்சரிக்கை விடுத்தார்.

  • `திருடர்கள், திருமண பந்தம் மீறி பாலியல் குற்றம் செய்வோர், கொலைகாரர்களைத் தண்டிப்பதைப் போல ராக்மாபாய், சரஸ்வதிபாய் (பண்டித ரமாபாய்) போன்றவர்களும் இந்தக் காரணத்துக்காகத் தண்டிக்கப் பட வேண்டும்' என்று திலகர் வற்புறுத் தி னார் (The Mahratta, 12 June 1887).

  • 1890 ஆம் ஆண்டில் 30 வயதான கணவர் ஹரி மைத்தி என்பவர் உட லுறவு கொண்டபோது 10 வயதான சிறுமி புல்மோனி இறந்ததை அடுத்து விவாதம் தீவிரமானது. ஏற்கெனவே மனைவியை இழந்திருக்கும் `அவர் மீது குற்றம் சொல்ல வேண்டாம்' என்று மக்களை திலகர் கேட்டுக் கொண்டார் (The Mahratta, 10 August 1890, The Calcutta Child-Wife Murder Case, Editorial).

  • `சிறு விவசாயிகளை நில உடை மையாளர்கள் மற்றும் வட்டிக்குப் பணம் தருபவர்களிடம் இருந்து விடுவித்துவிட்டது' என்று காலனி ஆதிக்க அரசின் மீது திலகர் அடிக்கடி குற்றம்சாட்டி வந்தார் (The Mahratta, 8 November 1903, Inamdar's Grievances, Editorial).

  • இனாம்தார்கள் மற்றும் கோட் கள் போன்ற பெரிய நில உடை மையாளர்களை திலகர் தீவிரமாக ஆதரித்தார். சிறு விவசாயிகளுக்கு அதிகாரம் கிடைப்பதை எதிர்த்தார் (The Mahratta, 27 September 1903. The Khoti Bill, Editorial).

  • 1915-ல் டி.கே. கார்வே புனேவில் பெண்கள் பல்கலைக்கழகத்தைத் தொடங்கியபோது திலகர் எதிர்த் தார். `சராசரி இந்துப் பெண்ணைத் தன் கணவரின் வீட்டில் இருப்பவர்களுக்கு ஆற்றவேண்டிய சிறப்புக் கடமை களைக் கொண்ட ஒரு மருமகளாகத் தான் பார்க்க வேண்டும்' என்பது திலகரின் வாதமாக இருந்தது. `சமை யல், வீட்டுப் பொருளாதாரம், குழந்தை பராமரிப்பு' என்ற விஷயங் களை மட்டும் பாடத் திட்டமாக வைக்க வேண்டும் என்று கார்வேயை திலகர் கேட்டுக் கொண்டார் (The Mahratta, 27 February 1916, Indian Women's University).

  • பெண்களுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது தில கரின் The Mahratta  இதழும், நகராட்சி யில் அவருடைய ஆதரவாளர்களும் அதை எதிர்த்தனர் (The Mahratta 17 August 1919, Free and Compulsory Education in Poona).


- தொகுப்பு: கோ.கருணாநிதி


நன்றி: பி.பி.சி. தமிழ்


No comments:

Post a Comment