டாக்டர் ஜஸ்டீஸ் ஏ.ஆர்.லட்சுமணன் அவர்களின் வாழ்விணையர் திருமதி. மீனாட்சி  ஆச்சி மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 25, 2020

டாக்டர் ஜஸ்டீஸ் ஏ.ஆர்.லட்சுமணன் அவர்களின் வாழ்விணையர் திருமதி. மீனாட்சி  ஆச்சி மறைவு

தமிழர் தலைவர் ஆசிரியர் இரங்கல்


மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், சிறந்த தமிழ் ஆர்வலருமான ஜஸ்டீஸ் ஏ.ஆர்.லட்சுமணன் அவர்களது வாழ்விணையர் திருமதி மீனாட்சி ஆச்சி (வயது 74) அவர்கள் இன்று (25.8.2020) காலை சென்னை கொட்டிவாக் கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினோம். ஆச்சியார் அவர்கள் சிறந்த இல்லத் தலைவி. எவரையும் அன்போடும், பண்போடும் உபசரிப்பவர். அவர் ஒரு வார காலமாக உடல் நலக் குறைவு காரணமாக மறைவுற்றார்.


சோகத்தில் வாடும் ஜஸ்டீஸ் அவர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும்  நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


இன்று பகல் ஒரு மணியளவில் அவரது மகன் மூத்த வழக்குரைஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்தோம்.


 


- கி.வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


25.8.2020


No comments:

Post a Comment