“சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” பெற விண்ணப்பிக்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 25, 2020

“சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” பெற விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி தகவல்


திருவள்ளூர், ஆக.25 சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.


ஒவ்வொரு ஆண்டும், சமூகநீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ் விருதினை பெறுவோருக்கு ரூ.1,00,000/- (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) விருது தொகையும், ஒரு பவுன் தங்கப் பதக் கமும், தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது.


2020-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர மேற் கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயர், சுய விவரம், முழு முகவரியுடன் 31.10.2020-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப் பிக்கலாம்.  மேற்கண்ட தகவலை, திருவள்ளூர்  மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஒரு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment