மாற்றுப் பாலினத்தவர்க்கு  தேசியக் கவுன்சில்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 26, 2020

மாற்றுப் பாலினத்தவர்க்கு  தேசியக் கவுன்சில்!


டில்லி, ஆக. 26- மாற்றுப் பாலினத்தவர்களுக்கான தேசியக் கவுன்சிலை, மத்திய அரசு உருவாக்கியுள்ளது.


மாற்றுப் பாலினத்தவர் (உரிமைகளைப் பாதுகாத்தல்) சட்டம் 2019, பிரிவு 16-இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகா ரங்களின்படி மத்திய அரசு 2020 ஆகஸ்ட் 21 அன்று இந்த  தேசியக் கவுன்சிலுக்கான (ழிசிஞி)அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.


மத்திய சமூக நீதி, அதிகா ரம் அளித்தல் துறை அமைச் சர் கவுன்சிலின் தலைவராக (அலுவல் சாராது) இருப்பார். பல்வேறு அமைச்சகங்கள், துறைகளின் பிரதிநிதிகள், மாற்று பாலினச் சமூதாயத்தி னரின் 5 பிரதிநிதிகள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள் உறுப் பினர்களாக இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள் ளது. துறை இயக்குநர் பாவ்னா படேல் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment