மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 26, 2020

மறைவு


தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் இராமசாமி அவர்கள் இதய நோயால் தாக்கப்பட்டு சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்  நேற்று (25-8-2020) காலை 10 மணி அளவில் மருத்துவமனையில் மறைவுற்றார்  என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு தனலட்சுமி என்கின்ற மகளும், ராஜசேகர், சண்முகம் என்கின்ற மகன்களும் உள்ளனர்.  பாப்பிரெட்டிப்பட்டி இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு  தருமபுரி மாவட்டக் கழகத் தோழர்கள் மரியாதை செலுத்தி னர். மாவட்டத் தலைவர் வீ.சிவாஜி தலைமையில் தருமபுரி மண்டலத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மாரி.கருணாநிதி, திராவிட மாணவர் கழக மாநிலத் துணைச் செயலாளர் த.மு.யாழ்திலிபன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆசிரியர் கு.தங்கராசு, கடத்தூர் ஒன்றிய மாணவர் கழகத் தலைவர் சமரசம்,பாப்பிரெட்டிப்பட்டி திமுக  நிர்வாகி செங்கல்மாரி ,பெரியார் பெருந்தொண்டர் பொன்னன், ஒன்றியச் செயலாளர் சின்னதுரை, ஒன்றிய இளைஞரணித் தலைவர் மோகன் குமார், மாணவர் கழகம் வினோத் ஆகியோர்  உடலுக்கு மாலை வைத்து  மரியாதை செலுத்தினர்.


No comments:

Post a Comment