புதிய கல்விக் கொள்கையா? புதிய குலக்கல்வித் திட்டமா? தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
தஞ்சை, ஆக. 26- தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் புதிய கல்விக் கொள்கையா? புதிய குலக்கல்வித் திட்டமா?தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கை நேற்று (25.8.2020) காலை 10.30 மணியளவில் தஞ்சையில் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.வெங்கடேசன் தலைமை யில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்ததூரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில்
தஞ்சை மாநகரத்தில் வணிகர் கள், மாணவர்கள், இளைஞர் கள், பொதுமக்களிடையே வழங்கப்பட்டது
நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மண்ட லத் தலைவர் மு.அய்யனார், மாவட்டத் தலைவர் சி.அமர் சிங், மாவட்டச் செயலாளர் அருணகிரி, கிராமப் பிரச்சா ரக் குழு அமைப்பாளர் அதி ரடி க.அன்பழகன், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், செயலாளர் முருகேசன், மண் டல மகளிரணிச் செயலாளர் கலைச்செல்வி, மாவட்ட தொழிலாளரணி அமைப்பா ளர் ஆட்டோ ஏகாம்பரம், மாணவர் கழகத் தோழர்கள், பிரின்ஸ், விடுதலையரசி, கபிலன், ஒரத்தநாடு ஒன்றிய இளைஞரணித் தலைவர் சுப்ரமணியன், தஞ்சை பகுதிச் செயலாளர் சூரியமூர்த்தி, பெரியார்செல்வன், தஞ்சை தெற்கு ஒன்றியச் செயலாளர் நெல்லுப்பட்டு இராமலிங் கம், உரத்தநாடு பெரியார் நகர் உத்திராபதி, கண்ணை அனந்திகா, கழகப் பேச்சாளர் இரா.பெரியார் செல்வன், தஞ்சை ஒன்றியஅமைப்பாளர் தனபால், போட்டோ மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment