'திராவிடப் பொழில்'  ஒருங்கிணைப்பு ஆசிரியராக டாக்டர் சோம.இளங்கோவன்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 11, 2020

'திராவிடப் பொழில்'  ஒருங்கிணைப்பு ஆசிரியராக டாக்டர் சோம.இளங்கோவன்!


பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் சார்பில் வெளிவரவிருக்கக் கூடிய "திராவிடப் பொழில்" காலாண்டிதழின் ஆசிரிய ராக முனைவர் வா.நேரு அவர்களும், சிறப்பாசிரிய ராக பேராசிரியர் முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களும், ஆசிரியர் குழுவில் மேனாள் துணைவேந்தர் பெ.ஜெகதீசன், பேரா சிரியர் ப.காளிமுத்து, பேராசிரியர் நம்.சீனிவாசன் ஆகியோரும் செயலாற்றத் தொடங்கியுள்ள நிலையில்,


இவ் விதழின் ஒருங்கிணைப்பு ஆசிரியராகச்  (Organising Editor) செயல்படுவதற்குப் பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் ஒப்புதலளித் துள்ளமைக்கு நமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறோம். "திராவிடப் பொழில்" பணிகள் முறையாகத் திட்டமிடப்பட்டு, தொடங்கி நடை பெற்று வருகின்றன என்பதையும் பெரியாரிய, திராவிடப் பற்றாளர்கள், சிந்தனையாளர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.


- டாக்டர் கி.வீரமணி,


வேந்தர்,


 பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்


No comments:

Post a Comment