தேசிய அளவில் தூய்மை நகரங்கள் பட்டியல் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 22, 2020

தேசிய அளவில் தூய்மை நகரங்கள் பட்டியல் வெளியீடு

61ஆவது இடத்திலிருந்து 312ஆவது இடத்துக்கு சென்னை பின்னடைவு



சென்னை,ஆக.22, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகா ரங்கள் அமைச்சகம் சார்பில் தேசிய அள வில் தூய்மை நகரங்கள் பட்டியல் நேற்று (ஆக.20) வெளியிடப்பட்டது. அதில் சென்னை மாநகரம், 312 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.


மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்கம் சார்பில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நகரங்களின் தூய்மையை மதிப்பிட்டு, தூய்மை நகரங்கள் பட் டியல் வெளியிடப்பட்டு வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சிகள் மேற் கொள்ளும் திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள், பொதுமக்களின் கருத் துகள், மத்தியஅரசு பிரதிநிதிகளின் கள மதிப்பீடு ஆகியவற்றின் அடிப் படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது.


தேசிய அளவில் தூய்மை நக ரங்கள் பட்டியலில் கடந்த 2017ஆம் ஆண்டு 235ஆவது இடத் திலிருந்த சென்னை மாநகராட்சி, 2018இல் 100ஆவது இடத்துக்கும், 2019இல் 61ஆவது இடத்துக்கும் முன்னே றியது. இதற்காக அப் போது தூய்மை நகரங்கள் பட்டி யலில் மாநில தலைநகரங்களில் வேகமாக முன்னேறி வரும் நகரம் என்ற விருதை சென்னை மாநக ராட்சி பெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தூய்மை நகரங்கள் பட்டியல் நேற்று (20.8.2020) வெளியிடப்பட்டது. மொத்தமுள்ள 4,242 நகரங்களில் சென்னை மாநக ராட்சி 312ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. தேசிய அளவில் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் முதலிடத்தை பிடித்துள்ளது.


10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நக ரங்கள் பட்டியலில் மொத்தம் 47 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் சென்னைக்கு 45ஆவது இடம் கிடைத்துள்ளது. கோவைக்கு 40ஆவது இடமும், மதுரைக்கு 42ஆவது இடமும் கிடைத்துள் ளன. இந்த பட்டியலிலும் சென்னை மாநகராட்சி பின்தங்கியே உள்ளது.


புதுமையான திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தியதற்கான பிரிவில் சென்னைக்கு முதலிடம் கிடைத்துள்ளது. திறந்தவெளியில் அசுத்தம் செய்யும் பழக்கம் இல்லாத நகரமாக சென்னை அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் 100விழுக்காடு வீடு வீடாக குப்பை களை மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகை பிரித்து பெறும் நடைமுறை அமலில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மாநகராட்சி பொதுக் கழிவ றைகள் முறையாக பராமரிக்கப் படாமல் உள்ளன. மேலும் திடக் கழிவு மேலாண்மையை முறையாக கடைபிடிக்காதது தொடர்பான வழக்குகளும் தேசிய பசுமைத் தீர்ப் பாயத்தில் நடைபெற்று வருகின் றன. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் கூறியதாவது, “மாநக ராட்சி சார்பில், மாநகரத்தில் தூய்மையைக் காக்க ஏராளமான திடக்கழிவு மேலாண்மை திட் டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் மூலம் குப்பைக் கிடங்குகளுக்கு செல்லும் குப்பை களின் அளவு வெகுவாக குறைந் துள்ளது. மாநகராட்சியில் தூய் மையை காக்க அனைத்து நட வடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன'' என்றார்.


No comments:

Post a Comment