ஒற்றைப் பத்தி - சோழ அரசர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 22, 2020

ஒற்றைப் பத்தி - சோழ அரசர்கள்

தமிழ்நாட்டின் மூவேந்தர்களை குறிப்பாக சோழ அரசர்களைப்பற்றி தந்தை பெரியார் அவர்களுக்கு நன்மதிப்பு இல்லை; காரணம் அவர்கள் பார்ப்பனர்களுக்கு ‘நல்ல வண்ணம்' ‘கொழுத்த' அடிமையாகக் கிடந்ததுதான்!


ஏதோ குத்து மதிப்பில் தந்தை பெரியார் அவர்களைப்பற்றிப் பேசினார், எழுதினார் என்று சொல்ல முடியாது. அந்தப் போக்கு தந்தை பெரியாரிடம் என்றுமே இருந்ததில்லை.


எடுத்துக்காட்டுக்குச் சில...


சோழ அரசர்களுக்கு இருந்த பட்டப் பெயர்களே அவர்களின் அடிமைத்தனத்துக்குப் பட்டயச் சான்றுகள் ஆகும்.



  1. நான்மறை தெரிந்த அந்தணரை ஆதரித்தான் முதலாம் இராஜராஜசோழன்.

  2. மனுநெறி நின்று அசுவமேதஞ் செய்தவன் முதலாம் ராஜாதி ராஜன்.

  3. மனுவாறு பெருக என்ற பெருமைக்குரியவன் முதலாம் குலோத்துங்க சோழன்.

  4. மனுவுடன் கோபர கேசரி என்று குறிக்கப்பட்டான் அதிவீர ராஜேந்திர சோழன்.

  5. மனுநெறி விளக்கியது என்ற பெயருக்கு உரியவனானான் வீரராஜேந்திர சோழன்.

  6. மன்னுயிர் தழைக்க மனுவாறு விளங்க என்று குறிக்கப்பட்டான் இரண்டாம் குலோத்துங்க சோழன்.

  7. மனுநெறிவாழ ஆளுமைச் செய்தான் மூன்றாம் ராஜராஜ சோழன்.

  8. மனுநீதி வளர்த்து நின்றவன் விக்கிரம சோழன்.

  9. நான்மறை செயல் வாய்ப்ப மனுநெறி தழைத்தோங்க ஆட்சி செய்தான் மூன்றாம் குலோத்துங்கன்.


நம் சோழ வேந்தர்கள் மனுவாதி பார்ப்பனீயத்திற்கு அடிபணிந்தவர்கள் என்பதற்கு வேறு எந்த எடுத்துக்காட்டுத் தேவை?


சோழ மண்டலத்தில் அய்ம்பத்தேழு ஊர்களை முதலாம் இராசேந்திரன் திரிபுவன மாதேவிச் சதுர்வேதி மங்கலம் என்ற பெயருடன் ஒரு தொகுதியாக்கி வேதங்களிலும், சாத்திரங்களிலும் வல்ல பிராமணர் பலருக்கு பிரம்மதேயமாக வழங்கினான். வீரராசேந்திர சோழனின் கன்னியாகுமரிக் கல்வெட்டு, அவ்வரசன் சோழநாடு, பாண்டியநாடு, தொண்டைநாடு, கங்கநாடு, குலூத நாடு என்பவற்றில் மூன்று வேதங்களிலும் வல்ல நாற்பதினாயிரம் பிராமணர்களுக்கு பிரம்மதேயங்கள் வழங்கி, அந்நாடுகளில் நிலைபெற்று வாழுமாறு செய்தான் என்ற செய்தியைக் கூறுகிறது. (‘‘தமிழ்நாட்டு வரலாறு சோழப் பெருவேந்தர்காலம்'' தொகுதி 2, 1994) நம் வேந்தர்களின் பார்ப்பன அடிமைத்தனத்துக்கு இன்னுமா ஆதாரம் தேவை?


- மயிலாடன்


No comments:

Post a Comment