இதிலும் ஆரிய - திராவிடக் கண்ணோட்டமா?
ஆயுர்வேதத்திற்கு ஆயிரம் ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு; சித்த மருத்துவமோ புறக்கணிப்பு; இதிலும் ஆரிய - திராவிடக் கண்ணோட்டமா? என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கேள்வியெழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
நேற்று (20.8.2020) சென்னை உயர்நீதி மன்றத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறிய சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டது பற்றிய வழக்கை விசாரித்துவரும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு மத்திய அரசின் துறைகள் - நிதி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைகளில் செய்யப்பட்டுள்ள ஒதுக்கீடுகள்பற்றி கண் டனம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு கடந்த முறை விசார ணைக்கு வந்தபோது, இந்தியப் பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர் வேதம், யுனானி, ஓமியோபதி, நேச்சரோபதி போன்ற மருத்துவத் துறைகளுக்குக் கடந்த 10 ஆண்டுகளில் எவ்வளவு நிதி ஒதுக்கப் பட்டுள்ளது என்பதைத் தனித்தனியாக தாக்கல் செய்ய மத்திய ஆயுஷ் (சுகாதாரத் துறை) அமைச்சகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் கடந்த 10 ஆண்டுகளில் ஆயுர் வேதத்திற்கு 3,000 கோடி ரூபாய், சித்த மருத்துவத்திற்கு 437 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் கண்டனம்!
அதைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், ‘‘சித்த மருத்துவத்தை மத்திய அரசு மாற் றாந்தாய் மனப்பான்மையுடன் கையாள் கிறது; பிற மருத்துவத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகைகளை விட மிகவும் குறைவான நிதி ஒதுக்கியிருப்பது துரதிருஷ்டமானது; பாரம் பரியமான சித்த மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சிக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்திருக்கவேண்டும். ஆயுஷ் அமைச் சகம் சித்த மருத்துவத்தைக் குறிப்பிடும் ‘எஸ்' என்ற எழுத்தை நீக்கி விடலாம்'' என்று கண்டனம் தெரிவித்தனர்.
மருத்துவ முறைகளில் அலோபதி அல்லது ஆங்கில மருத்துவ முறை என்று அழைக்கப்படும் நவீன அறிவியல் மருத்துவம், சித்த வைத்தியம் என்ற தமிழ் பண்பாட்டுடன் இணைந்த மூலிகைகளை முதன்மையாக்கிய முன் னோடி மருத்துவம், வடநாட்டு சமஸ்கிருத நூல்கள் அடிப் படையில் அமைந்த ஆயுர் வேதம், இஸ் லாமிய மருத்துவமாகக் கருதப்படும் யுனானி, வெளிநாட்டு ஜெர்மன் முறை மருத்துவம் ஓமியோபதி போன்றவற்றில்,
காலத்தால் மூத்த மொழி தமிழ்போல, சித்த மருத்துவமும் சிறந்த ஒன்று; குரு சீடர்கள் வழியில் மூத்தவர் கடைசிவரை அதன் கலவை - மூலிகை - பச்சிலை ரகசியங்களை எளிதில் வெளியே விடாமல் செய்ததுதான் அதன் குறைபாடு.
ஆனால், இப்போது அப்படி அல்ல. மருந்துக் கலவைபற்றி நவீன மருந்து களைப் போலவே விளக்கமான ‘லேபிள்கள்' ஒட்டப்படுகின்றன!
ஆரிய - திராவிடப் பண்பாட்டுப் போராட்டம்
இந்த மாற்றாந்தாய் மனப்பான்மைக்கு ஆழ்ந்த பின்னணி உண்டு; சிலரால் எளிதில் ஏற்க முடியாவிட்டாலும், கசப்பான உண்மை என்னவென்றால், இது ஒருவகை ஆரிய - திராவிடப் பண்பாட்டுப் போராட் டம் போன்றதே!
தமிழ் - சமஸ்கிருதம் பாகுபாடு போன் றதே! சமஸ்கிருதம் ‘தேவ பாஷை', தமிழ் ‘நீச்ச பாஷை;' இரண்டும் செம் மொழிகள்; இரண்டில் பேச்சு, எழுத்து எல்லாவற்றிலும் நிலைத்து நிற்கும் தமிழ்மொழி- உலக நாடுகள் பலவற்றில் ஆட்சி மொழி உள்பட பழகு மொழி; சமஸ்கிருதம்போல வழக் கொழிந்த மொழியல்ல!
இன்றைய மத்திய அரசிலே சமஸ் கிருதத்திற்குத்தான் தனிச்சலுகை - அதிக நிதி ஒதுக்கீடு - அரசமைப்புச் சட்ட எட்டாவது அட்டவணைப் பட்டியலில் உள்ள 22 மொழி களிலே மிக, மிக, மிகக் குறைந்தவர்கள் ‘‘பேசும்'' மொழி (130 கோடி மக்கள் தொகையில் 24 ஆயிரம் பேர் மட்டுமே) என்றாலும், பட்ஜெட்டில் முன் னுரிமை; கோவில், மத விழாக்கள், பூஜை, புனஸ்காரங்களில் முன்னுரிமை என்ற நிலை எப்படி யதார்த்தமோ, அதே முன் னுரிமைதான் ஆயுர்வேதத்திற்கும்!
அதுமட்டுமல்ல, இந்த மருத்துவத்தில் கூட இது ஒருவகை வர்ணாஸ்ரம முறை தான் - நான்கு, அய்ந்து அடுக்கு.
சித்த வைத்தியத்தின் வரலாறும், சிறப்பும் பெருமைக்குரியது!
உயர்ஜாதி ‘‘பிராமணனுக்கு'' உள்ள உயர்வும், சலுகையும் முன்னுரிமையும் நாலாம் ஜாதி, அய்ந்தாம் ஜாதி ‘‘சூத்திர, பஞ்சமர்''களுக்குத் தரப்படுவதில்லை என்பது எப்படி நடைமுறையோ - எப்படி கோவி லுக்கு வெளியே தமிழ் நிறுத்தப்படுகிறதோ - அதேநிலைதான் பலகாலமாக - சித்த வைத்தியத்திற்கும்; அதன் வரலாறும், சிறப்பும் பெருமைக்குரியது என்றாலும்கூட!
ஆங்கில மருத்துவம் மற்ற மருத்துவ முறைகளில் பக்க விளைவுகள் (Side Effects) சிற்சில நேரங்களில் நோயின் கொடுமை யைவிடக் கூடுதலாகக்கூட ஏற்படும். ஆனால், சித்த முறையில் பக்க விளைவு ஏற்படவே ஏற்படாது.
நீதிக்கட்சி ஆட்சியில்
தனிக் கல்லூரி!
நீதிக்கட்சி - திராவிட இயக்க ஆட்சி யில் (1920-26) இதற்கென தனிக் கல்லூரி தொடங்கி, முதன்மைபடுத்திய வரலாறு நினைவூட்டப்பட வேண்டிய ஒன்று.
இப்போது சித்த மருத்துவத்தின் கூறு களான கபசுரக் குடிநீர் முதல் பலவும் தானே கரோனா தொற்றுக்கு - நோய் எதிர்ப்புச் சக்தியை உடலில் வளர்க்க தமிழக அரசாலேயே தரப்படுகிறது!
அப்படியிருந்தும் ஏன் மாற்றாந்தாய் மனப்பான்மை என்று உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகளே மனம் நொந்து இப்படி சுட்டிக் காட்டும் அளவுக்கு இந்த நிதி ஒதுக்கீடு இருக்கலாமா?
வருண தர்ம பேதத்தைக் களைய
அரசுகள் முன்வரவேண்டும்!
பாளையங்கோட்டையிலும், அண்ணா நகரிலும் உள்ள சித்த மருத்துவக் கல்லூரி களில் சித்தா படித்து பட்டம் பெற்று - பிஎச்.டி., வரை படித்துச் சிறந்த மருத்து வர்களாக உள்ள பலரை நாம் அறிவோம். பண்டிட் எஸ்.எஸ்.ஆனந்தம் அவர்கள் காலம்முதல் இன்றுவரை இப்படிப்பட்ட ‘‘வருண தர்ம பேதம்'' சித்த மருத்துவ முறைக்கு இருப்பதைக் களைய அரசுகள் முன்வரவேண்டும்.
மஞ்சள் காமாலை போன்ற பல நோய் களுக்கு ஆங்கில அலோபதி மருந்தைவிட, சித்த வைத்தியத்தில் கீழாநெல்லி மற்றும் பல வேர்கள் கொண்ட மருத்துவம், பல உயிர்களைக் காப்பாற்றி உள்ளது என்பது கண்கூடாகக் கண்ட ஒன்றல்லவா!
போலிகள் எந்த முறையிலும் உண்டு. அதற்காக ஆராய்ச்சிக்குரிய இயற்கைச் செல்வத்தைப் புறந்தள்ளிவிடக் கூடாது. இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை மாறிட ஒரு புது மருந்தும் தேவை! தேவை!!
நீதிமன்ற அறிவுறுத்தல் சரியான கருத்தாகும்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
21.8.2020
No comments:
Post a Comment