பயணியருக்கு வழிமுறைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 4, 2020

பயணியருக்கு வழிமுறைகள்

மத்திய உள்துறை அறிவிப்பு


புதுடில்லி, ஆக. 4  வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணியருக்கான புதிய வழிமுறைகளை, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, பன்னாட்டு விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 


பன்னாட்டு விமானங்கள் மூலம், இந்தியா வரும் பயணியருக்கான புதிய வழிமுறைகளை, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. இந்த புதிய வழி முறைகள், ஆகஸ்ட், 8ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.


அதன்படி, இந்தியா வரும் பயணியர், 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர். முதல் ஏழு நாட்கள், தனிமைப்படுத்தும் மய்யத்திலும்; அடுத்த ஏழு நாட்கள், வீட்டிலும் தனித்திருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட் டுள்ளது. கரோனா தொற்று இல்லை என்பதை உறுதிபடுத்தும் பரிசோதனை சான்றிதழை சமர்ப்பித்தால், தனிமைப்படுத்தும் மய்யத்தில் தங்குவதில் இருந்து, அந்நபர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.


இந்தியாவுக்குப் புறப்படுவதற்கு, 72 மணி நேரத்திற்கு முன்பாக, டில்லி விமான நிலைய இணையதளத்தில், இதற்கான சுய ஒப்புதல் படிவத்தை நிரப்பி  சமர்ப்பிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான வழிமுறைகளை, மாநில, யூனியன் பிரதேச அரசுகள் தனியாக வகுத்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment