அமெரிக்காவில் பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பில் சிறுவர்களுக்கான உரை அரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 13, 2020

அமெரிக்காவில் பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பில் சிறுவர்களுக்கான உரை அரங்கம்


பாஸ்டன், ஆக.13 அமெரிக்க பெரியார் _ அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பில் 8.8.2020 அன்று  சிறுவர்களுக்கான உரை அரங்கம் நடைபெற்றது.  இதில் கலந்து கொண்ட சிறுவர்கள் பகுத்தறிவாளர்  பெரியார்,  புரட்சியாளர் அம்பேத்கர் என்ற தலைப்புகளில் பேசினார்கள்.


அமெரிக்காவில் வளரும் இளம் தலைமுறையினருக்குத்   தலைவர் களைக் கொண்டு செல்லும் விதமாக , "பகுத்தறிவாளர் பெரியார் அல்லது புரட்சியாளர் அம்பேத்கர்" என்ற தலைப்பில் இணையவழி "டாக் ஷோ" ஒன்றை  ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஒருங்கிணைத்தனர்.


பாஸ்டனில் இருந்து தோழர் மோகனா அறிமுக உரையுடன்  நிகழ்ச்சியைத் தொடங்கிவைக்க , ஆர்லாந்தோவிலிருந்து செல்வப் பெருமாள் சிறார்களின் மொழியிலேயே அவர்களை உற்சாகப் படுத்தி சுவாரசியமாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.


அமெரிக்காவின் பல மாகா ணங்களிலிருந்து முப்பதிற்கும் மேற் பட்ட சிறுவர், சிறுமியர் ஆர்வ முடன் பங்கேற்று தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் குறித்துப் பேசினர்.  இந்த நிகழ்வு படிப்பு வட் டத்தின் முகநூல் பக்கத்தில் நேர லையாகவும் ஒளிபரப்பப்பட்டது.


பெரியார் மற்றும் அம்பேத்கர் பற்றிய பல வரலாற்றுத் தகவல்களை நிகழ்ச்சி முழுவதும் சிறுவர்கள் தங்களது பேச்சின்போது பகிர்ந்து கொண்டனர்.  கல்வி,  சமூக நீதியின் முக்கியத்துவம் பற்றிப் பேசிய அவர்கள், சமகால பிரச்சினையான நிறம் ,  ஜாதி போன்ற எந்த  ஒன்றின் அடிப்படையிலும் ஒருவரை ஒருவர் தாழ்த்தாமல் இருக்க வேண்டும் எனவும் கூறினர். அம்பேத்கரின் வாழ்க்கை, அவர் பெற்ற பட்டங் களை, அமெரிக்காவில் புகழ்பெற்ற ராப் இசையின் வடிவில்  ஒரு சிறுவன் பாடியது முத்தாய்ப்பாக அமைந்தது.


நிகழ்வில் கலந்துகொண்ட சிறார்கள் அனைவரும் மிகவும் சிறப்பாகப் பேசியதோடு, தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம் பேத்கரும் அமெரிக்க மண்ணில் பல தலைமுறைகள் கடந்து வாழ் வார்கள் என்ற நம்பிக்கை விதையை விதைத்தனர்.


இறுதியாக ஆர்லாந்தோவை சார்ந்த தோழர்  வா.சா.குழலன் இந் நிகழ்வில் பங்கேற்ற  சிறார் களுக்கும், அவர்களை ஊக்கப் படுத்திய பெற்றோர்களுக்கும் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment