திருப்பத்தூர் மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் புதிய தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்புக் கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 13, 2020

திருப்பத்தூர் மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் புதிய தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்புக் கருத்தரங்கம்

திருப்பத்தூர், ஆக.13 திருப்பத்தூர் மாவட்ட திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. மாநில திராவிட மாணவர் கழகத் துணைச் செயலாளர் சிற்றரசன் தலைமையில் நடைபெற் றது. மத்தூர் மாணவர் அணி பொறுப் பாளர் நிலவன் அனைவரையும் வர வேற்று உரையாற்றினார். மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.சி. எழிலரசன் முன்னிலை வகித்து உரையாற்றினார். பகுத்தறிவாளர் கழக மாநிலத்  துணைத் தலைவர் அண்ணா சரவணன் தொடக்கவுரை யாற்றினார்.


திராவிடர் கழக மகளிர் பாசறை மாநில அமைப்பாளரும், தலைமைக் கழக சொற்பொழிவாளருமான சே.மே. மதிவதனி, புதிய கல்விக் கொள்கையின் பார்ப்பனர் சூழ்ச்சி, மொழித் திணிப்பு, சமூகநீதி அழிப்பு ஆகியவை குறித்து தெளிவாக உரையாற்றினார்.


தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட மகளிர் அணித் தலைவர்  கவிதா,  மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன் ஆகியோர் உரையாற்றினர். மாநில மாணவர்  கழக அமைப்பாளர் செந்தூர் பாண்டியன், திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா. குணசேகரன், கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், மாநில மகளிர் அணி பொருளாளர் எ. அகிலா, மாநில மகளிர் அணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, தருமபுரி மண்டல மாணவர் கழகச் செயலாளர் செல்ல துரை, இளைஞர் அணிச் செயலாளர் வ.ஆறுமுகம் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள், மாணவர் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வினை வேளாண் பல்கலைக் கழக மாணவர் அணி பொறுப்பாளர் ஜெ.குமிழி  ஒருங் கிணைத்தார். நிறைவாக சட்ட கல்லூரி மாணவர் ச. மணிமொழி நன்றியுரை ஆற்றினார்.


No comments:

Post a Comment