அனைத்துக் கட்சியினரின் ஒருங்கிணைந்த முயற்சி -  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்  உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 13, 2020

அனைத்துக் கட்சியினரின் ஒருங்கிணைந்த முயற்சி -  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்  உத்தரவு

சாலையோரத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்



பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் வடக்குப் பகுதி சாலை ஓரத்தில் அனுமதியின்றி விநாயகர் சிலை இரவில் திடீரென்று வைக்கப்பட்டது. இதை அறிந்த  திராவிடர் கழக பொறுப்பாளர்கள், அனைத்து தோழமை இயக்கங்களான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய தொழிலாளர் கட்சி, மதிமுக, திராவிடர் விடுதலை கழகம் ஆகிய இயக்கங்கள் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் தி.க. மாவட்ட தலைவர் சி.தங்கராசு தலைமையில் உச்சநீதிமன்ற ஆணையையும் இணைத்து புகார் வழங்கினர். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி வருவாய் துறையினர், காவல்துறையினர் பாதுகாப்புடன் 9.8.2020 ஞாயிறு அன்று விநாயகர் சிலை அகற்றப்பட்டது. அனைவரின் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.


No comments:

Post a Comment