ஆங்கிலேய ஆட்சிக் காலத்திற்கு இந்தியாவைக் கொண்டு சென்ற மோடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 12, 2020

ஆங்கிலேய ஆட்சிக் காலத்திற்கு இந்தியாவைக் கொண்டு சென்ற மோடி

டில்லி, ஆக. 12- சுதந்திரம் பெற்ற 1947ஆம் ஆண்டிலிருந்து, இந்தியப் பொருளாதாரம் 2020-21ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தான் மோசமான நிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கிறார் உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் கவுஷிக் பாசு.


"இப்போதைய இந்த மோசமான நிலை, காலனி ஆதிக்க இந்தியாவோடு ஒப்பிடத்தக்கது" என்கிறார் அவர். அவர் மேலும் கூறியுள்ளதாவது, "மதவாத அரசியல் மற்றும் உறுதியான எந்த திட்டமும், முன்னேற்பாடும் இல்லாத இந்தச் சூழல், நாட்டில் முதலீடு மற்றும் வேலை உருவாக்கத்தை கடுமையாக பாதிக்கிறது. பிரதான கொள்கை முன்னெ டுப்புகள் தொடர்பாக இந்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.


கடந்த 2019--20ஆம் ஆண்டு காலக்கட் டத்தில், இந்தியப் பொருளாதார வளர்ச்சி 4.2% என்பதாக இருந்தது குறிப்பிடத் தக்கது. மோடியின் பணமதிப்பிழைப் பையும் இவர் கடுமையாக விமர்சனம் செய் திருந்தார். காரணம் எதுவுமே இன்றி தேர்தல் பிரச்சாரம் போல ஏதோ சில காரணத்தைக் கூறி பண மதிப்பிழப்பு கொண்டுவருவது எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது. மாற்றாக அது பொருளா தார சீரழிவிற்கு வழிவகுக்கும் என்று கூறியிருந்தார். அன்று இவர் கூறியதைப் போன்றே பண மதிப்பிழப்பு காலத்தில் இருந்து தொடங்கிய பொருளாதாரச் சரிவு மிகவும் மோசமான நிலைக்கு சென்று விட்டது, அரசு தனது பொருளாதார தோல்வியை மறைக்க முயற்சி செய்து கொண்டு இருந்த வேளையில் கரோனா பிரச்சினை உருவாகிவிடவே அனைத்து பழியையும் கரோனா வைரஸின் மீது போட்டு தன்னைக் காப்பாற்றிக் கொண்டது.


No comments:

Post a Comment