நாடு முழுவதும் பயணம் செய்ய இ-பாஸ் நடைமுறை கூடாது: மத்திய அரசு உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 23, 2020

நாடு முழுவதும் பயணம் செய்ய இ-பாஸ் நடைமுறை கூடாது: மத்திய அரசு உத்தரவு


புதுடில்லி, ஆக. 23- ‘மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் உள்ளிட்ட கட்டுப் பாடுகள் விதிக்கக் கூடாது’ என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி தேசிய ஊரடங்கு அமல்படுத் தப்பட்டது. இதனால் தொழில் துறை கள் முடங்கி நாட்டின் பொருளா தாரம் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் ஊர டங்கில் படிப்படியாக தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி 3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வை மத்திய அரசு அறிவித்தது.


அதில், மாநிலத்திற்குள்ளேயும், வெளிமாநிலங்களுக்குச் செல்லவும் இ--பாஸ் தேவையில்லை என அறிவிக் கப்பட்டது. ஆனாலும், நோய் பரவல் பாதிப்புக்கு ஏற்ப இ--பாஸ் நடை முறையை தொடர்வது அல்லது கைவிடுவது குறித்து மாநில அரசு களே முடிவெடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால், தமி ழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தொடர்ந்து இ--பாஸ் நடைமுறை இருந்து வருகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.


அதில் கூறப்பட்டுள்ளதாவது:


மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர் வில், மாநிலத்திற்குள்ளும், மாநிலங் களுக்கு இடையேயும் மக்கள் பயணிக் கவும், சரக்கு போக்குவரத்துக்கும் கட் டுப்பாடுகள் இல்லை என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், சில மாநிலங்களில், மாவட்டத்திற்குள் மக்கள் பயணிக்கவும், வெளிமாநிலங் களுக்கு செல்லவும் இ--பாஸ் போன்ற கட்டுப்பாடுகளை இன்னும் தொடர் கிறது. இதன் காரணமாக மாநிலங் களுக்கு இடையேயான சரக்கு போக் குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இது விநியோக சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்தி, பொருளாதார நடவடிக் கைகள் மற்றும் வேலைவாய்ப்பில் குழப்பத்தை விளைவிக்கிறது. எனவே, ஊரடங்கு தளர்வு வழிமுறைகளை பின்பற்றி, எந்த கட்டுப்பாடுகளையும் மாநில அரசுகள் விதிக்கக் கூடாது. மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக் குள் பயணிக்கவும் சரக்குகளை அனுப் பவும் எந்த விதமான கட்டுப்பாடு களையும் விதிக்கக் கூடாது.


இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தமிழகத்தில் இ--பாஸ் நடை முறையில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டுமென திமுக உள் ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வந்துள்ளன. பொதுமக் களும் பக்கத்து மாவட்டங்களுக்கு வேலை, தொழில் நிமித்தமாக செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாயினர். தற்போது விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ--பாஸ் வழங்கப்படு வதாக தமிழக அரசால் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தநிலையில், இபாஸ் கட்டுப்பாடுகள் கூடாது என்று மத் திய அரசு உத்தரவிட்டுள்ளது என் பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment