குடியாத்தம் நகரச் செயலாளர் இரா.இராமன் நேற்று (27.8.2020) இரவு 9.00 மணியளவில் மாரடைப்பால் இயற்கை எய்தி னார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
வேலூர் மண்டலத் தலைவர் வி.சட கோபன், மாவட்டத் தலைவர் வி.இ.சிவக்குமார், மாவட்டச் செயலாளர் கு.இளங்கோவன் மற் றும் கழகப் பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். இன்று 28.8.2020 பிற்பகல் 3.00 மணியளவில் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
- - - - -
மானாமதுரை இராசாமணி (வயது 85) நேற்று (27.08.2020) அதிகாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். சிவ கங்கை மண்டலச் செயலாளர் அ.மகேந்திரரா சன் மறைவுற்ற இராசாமணி உடலுக்கு கருப்பு உடை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிவகங்கை மாவட்டத் தலைவர் சுப்பையா, மாவட்ட அமைப்பாளர் அனந்தவேல், பொதுக் குழு உறுப்பினர் வழக்குரைஞர் இன்பலாதன், மானாமதுரை நகர்ச் செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். நேற்று பிற்பகல் அவருடைய விருப்பத்தின்படியே சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் எதுவும் இல்லாமல் இறுதி நிகழ்வு நடைபெற்றது.
No comments:
Post a Comment