மருத்துவப் படிப்பில்  ஓபிசி பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 12, 2020

மருத்துவப் படிப்பில்  ஓபிசி பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு

அகில இந்தியப் பிற்படுத்தப்பட்ட பணியாளர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் பிரதமருக்குக் கடிதம்


மருத்துவப் படிப்பில் அகில இந்தியப் தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு (27.7.2020) அடிப் படையில், விரைவில் இட ஒதுக்கீடு அளித்திட மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்தும்படி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, அகில இந்தியப் பிற் படுத்தப்பட்ட பணியாளர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கடிதம் மூலமாக வலியுறுத்தப்பட்டது.


உச்சநீதிமன்றம்தான் அறிவுறுத்த வேண் டும் என்று  மத்திய சுகாதாரத் துறையின் சார்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதங்களை, சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.


மத்திய அரசே, பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என்று தெரிவித்துள்ளது. ஆகவே, உயர்நீதிமன்றம் தீர்ப்பின்படி, இதற்கான ஒரு குழுவை உடனடியாக நியமித்து, ஓபிசி பிரிவினருக்கு வழக்கில் சுட்டிக்காட்டப் பட்டுள்ள தமிழ்நாடு அரசு இட ஒதுக்கீடு சட்டத்தின்படியும், மத்திய சுகாதாரத்துறை டிசம்பர் 2010 இல் நிறை வேற்றியுள்ள விதிகள்படியும், இட ஒதுக்கீடு வழங்கிட உரிய நடவடிக்கை எடுத்திட, கூட்டமைப்பு வலி யுறுத்தியுள்ளது.


மேற்கண்ட தகவலை அகில இந்தியப் பிற்படுத்தப்பட்ட பணியாளர் நலச் சங்கங் களின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment