செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 12, 2020

செய்தித் துளிகள்....

* கருநாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஹிரியூர் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில், அதில் பயணம் செய்த 5 பேர் உடல் கருகி பலியாகினர்.


* பவானி சாகர் அணையில் இருந்து 14 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


* ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்டரில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.


* உலகளவில் கரோனா பாதிப்பு, 6 வாரங்களில் இரட்டிப்பு ஆகி உள்ளது.


* மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி பலியான, மேலும் மூவரின் உடல்கள் மீட்பு; சாவு எண்ணிக்கை 52 ஆக உயர்வு


* ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி பலியான தமிழக மருத்துவ மாணவர்களின் உடலைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சரிடம், டி.ஆர்.பாலு எம்.பி. வேண்டுகோள் விடுத்தார்.


* மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் நீதிமன்றக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தியதை எதிர்த்த வழக்கு தொடர்பான விசாரணை உயர்நீதிமன்றத்தில் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


* தமிழகத்தில் 16 மாவட்டங்களில் பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டியது. மேலும் 12 வயதுக்கு உட்பட்ட 15,113 குழந்தைகளுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


* சென்னை விமான நிலையத்தில் கரோனா தொற்று இல்லை என்ற சான்றுடன் வந்த பயணிகளால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை ஏற்க மறுத்த அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.


* தமிழக அரசின் மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரிகள் இருவருக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


* கரோனாவால் பலியானவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.5 லட்சம் கேட்ட வழக்கு தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை துவங்க உள்ளது.


* என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.3,600 முதல் ரூ.4,000 வரை ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது.


No comments:

Post a Comment