‘டிரம்ப்பால் அமெரிக்க ஜனநாயகம் அச்சுறுத்தலை சந்தித்துள்ளது': முன்னாள் அதிபர் ஒபாமா விமர்சனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 20, 2020

‘டிரம்ப்பால் அமெரிக்க ஜனநாயகம் அச்சுறுத்தலை சந்தித்துள்ளது': முன்னாள் அதிபர் ஒபாமா விமர்சனம்

வாஷிங்டன், ஆக.20 அதிபர் பதவியை டொனால்டு டிரம்ப் தீவிரமாக எடுத்து கொள்ளாததால், அமெ ரிக்காவில் ஜனநாயகம் அச்சுறுத்தலைச் சந்தித் துள்ளது' என, முன்னாள் அதிபர் பராக் ஒபாமா விமர்சித்துள்ளார்.


அமெரிக்காவில் வரும் நவ., 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப், மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் அதிபர் பதவிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.


அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அதிகாரப் பூர்வமாக தேர்வு செய்யும் மாநாடு ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. நேற்று அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்டார். திங்களன்று துவங்கிய கூட்டத்தின் முதல்நாளில் பேசிய அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா, ‘அமெரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தவறான அதிபர் டிரம்ப்' என, கடுமையாக சாடியிருந்தார். செவ்வாயன்று பேசிய முன்னாள் அதிபர்கள் ஜிம்மி கார்ட்டர் மற்றும் பில் கிளிண்டன் ஆகியோர், ‘நாட்டின் நெருக்கடிகளை நிவர்த்தி செய்யத் தேவையான திறமைக்குப் பதிலாக டிரம்பின் அரசு குழப்பத்தில் மூழ்கியுள்ளது' என, விமர்சனம் செய்திருந்தனர்.


இந்நிலையில், நேற்று நடந்த கூட்டத்தில் ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசை பரிந்துரை செய்து, முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பேசியதாவது: கடந்த 2017 ஆம் ஆண்டில் டிரம்பிடம் வெள்ளை மாளிகையை ஒப்படைத்தபோது, ‘குடியரசுக் கட்சி உறுப்பினர்கள், வேலையை தீவிரமாக எடுத்துக் கொள்வதில் கொஞ்சம் அக்கறை காட்டக்கூடும். அலுவலகத்தின் தேவையை உணரவும், பராமரிப்பில் இருந்த ஜனநாயகத்தின் மீது பயபக்தியுடன் செயல்படுவர்' என, எண்ணினேன். ஆனால், டிரம்ப் ஒருபோதும் அதை செய்யவில்லை. ஆனால், அமெரிக்கா மீது மோசமான தூண்டுதல்களை டிரம்ப் கட்டவிழ்த்து விட்டுவிட்டார். உலகெங்கிலும் நமக்கு கிடைத்த பெருமை மோசமாக குறைந்துவிட்டது. நம்முடைய ஜனநாயக அமைப்புகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அச்சுறுத்தலை சந்தித்துள்ளது.


இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment