லட்சம் கோடி ரூபாய்களைத் தொடும் பிஎம் கேர்ஸ் நிதி விவரங்களைத் தரமறுக்கும் மோடிக்கு ராகுல் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 20, 2020

லட்சம் கோடி ரூபாய்களைத் தொடும் பிஎம் கேர்ஸ் நிதி விவரங்களைத் தரமறுக்கும் மோடிக்கு ராகுல் கண்டனம்


புதுடில்லி,ஆக.20கரோனாதடுப்புநட வடிக்கைகளுக்காக பிஎம் கேர்ஸ் மூலம் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் நிதி திரட்டிவருகிறார். இதில் திரையுலக பிரபலங்கள், விளை யாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் தொடங்கி அனைத்துத் தரப்பு மக்களும் நிதி அளித்து வருகின்றனர்.


பேரிடர் காலங்களில் உதவ பிரத மர் தேசிய நிவாரண நிதி என்ற அமைப்பு இருக்கும்போது எதற்காக பிஎம் கேர்ஸ் நிதி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது என்ற கேள்விகள் எழுந்தன. காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் இது தொடர்பாக கேள்வி களை எழுப்பி வருகின்றன.


இந்நிலையில், தகவல் அறியும் ஆர்வலர் பிஎம் கேர்ஸ் நிதியைப் பற்றி தெரிந்து கொள்ளுமாறு முறை யிட்டதைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம்  தகவல் மறுக்க, நிதி குறித்த தகவல்களை மறுத்ததற்காக ராகுல் காந்தி பிரதமருக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


பிஎம் கேர்ஸ் தொடங்கிய சில வாரங்களிலேயே இந்தி நடிகர் அக்சய் குமார், டாடா குழுமம் என பல பிரபல நிறுவனங்கள் ரூ.3,000 கோடிவரை நிதி வழங்கியுள்ளது, மேலும் அனைத்து மத்திய அரசு பணியாளர்களின் ஒரு நாள் ஊதியம், நாடாளுமன்ற இரு அவைகளில் உறுப் பினராக உள்ளவர்களுக்கு தரப்படும் மேம்பாட்டுப் பணிக்கான நிதி என பல வகைகளில் பிஎம் கேருக்கு நிதி பிடித்தம் செய்யப்பட்டது. மேலும் ஒரு சில அயல்நாட்டு நிறுவனங்களும் இதற்கு நிதி அளித்துள்ளதாகக் கூறப் படுகிறது.


ஆனால்,இந்தநிதியத்தின்தலைவ ராகஉள்ளமோடிஅல்லதுஅமித்ஷா இதற்கான நிதி ஆதாரம் செலவுத் தொகைமற்றும்எதற்காகபயன்படுத் தப்படுகிறதுஎன்றுஇன்றுவரைதெளி வான ஒரு அறிக்கை வெளியிடவில்லை. அமெரிக்கா அரசால் இலவசமாக கொடுக்கப்பட்ட செயற்கை சுவாசக் கருவிகளுக்கு பிஎம் கேர்ஸ் ஸ்டிக்கர் ஒட்டி,அதையும் பிஎம் கேர்ஸ் நிதியில் வாங்கியதாக காட்டிக் கொண்டது. மேலும் பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து குஜராத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வாங்கப்பட்ட செயற்கை சுவாசக் கருவிகள் தரமற்றவை என்று குஜ ராத் மாநில தலைமை மருத்துவ ஆலோசகர் மற்றும் கரோனா தடுப் புப் பணியை மேற்பார்வையிடும் மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற பல குழப்பமான நிலையில் உள்ள பிஎம் கேர்ஸ் நிதி யகம் குறைந்தபட்சம் மக்களிடம் தன் னிடம் உள்ள நிதி தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்பது மக்களின் விருப்ப மாக உள்ளது.


No comments:

Post a Comment