ஏ, தாழ்ந்த தமிழகமே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 20, 2020

ஏ, தாழ்ந்த தமிழகமே!

‘கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை' என்பது கிராமத்துப் பழமொழி. அதை நினைவூட்டுவதாக அமைந்துள்ள அண்மைக்கால தமிழக அமைச்சர்களின் புதிதாக இரண்டாவது தலைநகர்ப் ‘புதுக்கரடி' பேச்சு!


கரோனா தொற்று நாளும் அதிகமாகிவருகிறது - தமிழ்நாட்டின் பிரமுகர் முதல் எளிய மக்கள் வரை இதுவரை ஏராளமானோர் உயிர்ப் பலி. இன்று மட்டுமே இந்தியாவில் ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். 21 லட்சம் பேருக்கு இந்தக் கரோனா தொற்று குறைந்தபாடில்லை. தமிழகப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்று முதலமைச்சரின் கூற்று.


இந்நிலையில், தமிழ்நாடு அமைச்சர்களில் - கோஷ்டிகளாகி - முதலில் முதலமைச்சர் வேட்பாளர் பிரச்சினை பேசினர்; அதை ஒரு வகையாக முடக்கி வைத்து, இப்போது 


2 ஆம்  தலைநகர்பற்றி ஆளுக்கொரு பேச்சு; நாளுக்கொரு விசித்திரம் எல்லாம் அந்த அம்மையார் இல்லாததினால் ஏற்பட்ட ‘காத்திரம்' என்ற நிலைப்பாடு - திடீரென்று ஏன்?


மக்களின் அன்றாடப் பிரச்சினைகளில் தமிழக ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட தோல்விகளை மறைக்க - திசை திருப்பவே!


டில்லி அரசிடம் போராடக் கூட வேண்டாம் - வாதாடக் கூடத் தயாரில்லாத ‘வீராதி வீரர்கள்' இவர்கள் வலம் வந்து, டில்லிக்குத் தூது படலம் நீளுகிறதே!


அந்தோ, ஏ, தாழ்ந்த தமிழகமே! என்று அறிஞர் அண்ணா முன்பு பேசிய தலைப்புதான் நினைவுக்கு வருகிறது!


 


No comments:

Post a Comment