தென்காசி, ஆக. 5- தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்குப்பருவ மழை தீவிரம் அடைந்துள் ளது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் பலத்த மழையும், மற்ற பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைக ளுக்கு நீர் வரத்து அதிகரித் துள்ளது. இதனால், நீர்மட் டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 85 அடி உயரம் கொண்ட கடனாநதி அணை நீர்மட்டம் 9.50 அடி உயர்ந்து 51.50 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 391 கனஅடி நீர் வந்தது. 10 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. 84 அடி உயரம் கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 7.50 அடி உயர்ந்து 66.50 அடியாக உள்ளது.
அணைக்கு விநாடிக்கு 216 கனஅடி நீர் வந்தது. 3 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதேபோல், 72 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணை நீர்மட்டம் 7 அடி உயர்ந்து 40.68 அடியாக உள்ளது. 133.22 அடி உயரம் உள்ள அடவி நயினார் கோவில் அணை நீர்மட்டம் 9 அடி உயர்ந்து 91 அடியாக இருந் தது. 36.10 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளள வில் இருப்பதால் அணைக்கு வரும் 49 கனஅடி நீர் அப்ப டியே வெளியேற்றப்படுகிறது.
அணைக்கு விநாடிக்கு 197 கனஅடி நீர் வந்து கொண்டி ருக்கிறது. 5 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நேற் றைய பதிவின்படி, மாவட் டத்தில் அதிகபட்சமாக குண் டாறு அணைப் பகுதியில் 52 மி.மீ. மழை பதிவானது. மற்ற இடங்களில் பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்) விவ ரம் வருமாறு:- கருப்பாநதி அணை, அடவிநயினார்கோ வில் அணையில் தலா 48மிமீ, செங்கோட்டை- 35மிமீ, தென்காசி- 22மிமீ, கடனாநதி அணை, ராமநதி அணையில் தலா 18மிமீ, ஆய்க்குடி- 7.20மிமீ, சங்கரன்கோவில்-1மிமீ ஆக பதிவானது. மலைப் பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் நேற்று இரவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் இன்றும் வெள்ளப்பெருக்கு நீடித்துள் ளது என்பது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment