திருக்குவளையில் கலைஞர் வெண்கலச்சிலை திறப்பு
சென்னை,ஆக.7, முத்தமிழறிஞர் கலை ஞரின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், மலர்தூவி மரியாதை செலுத்தினார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டா லினுடன், தி.மு.க பொருளாளர் துரை முருகன், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கனிமொழி, கலாநிதி வீராசாமி உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, அவர் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், சென்னை அண்ணா அறிவா லயத்தில், கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்தார். அன்னை அஞ்சுககம் அறக் கட்டளை சார்பில் திருக்குவளையில் கலைஞர் அவர்களின் இல்லத்தில் அமைக் கப்பட்ட கலைஞர் மார்பளவு வெண்கலச் சிலையைக் காணொலி வாயிலாக தளபதி மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். திருக் குவளையில் மேனாள் அமைச்சர் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ மற்றும் திமுக பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment